BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

பழனி- அரசு மருத்துவ மனையில் தனியார் பாதுகாப்பு காவலர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் திடீர் போராட்டம்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அரசு மருத்துவமனையில் தனியார் நிறுவன பாதுகாப்பு காவலர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் தங்கள் பணிகளை புறக்கணித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மருத்துவமனையில் செவிலியர்கள், மருத்துவர்கள் செய்ய வேண்டிய பணிகளை பாதுகாப்பு வேலையில் இருக்கும் எங்களை செய்யச் சொல்வதால் நாங்கள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றோம்.

மேலும் துப்புரவு பணி செய்யும் பணியாளருக்கு செவிலியர்கள் பணியைப் பற்றி என்ன தெரியும் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் இதற்கு யார் பொறுப்பு ஏற்பது எனக்கூறியும், கொரோனா ஊரடங்கு காலத்தில் எங்கள் உயிரையும் துச்சமென பாராமல் பணியாற்றிய எங்களுக்கு தரவேண்டிய ஊக்கத்தொகை இன்னும் தரவில்லை. இதை கருத்தில் கொண்டே இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டதாக தனியார் பாதுகாப்பு காவலர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் போராட்டத்தை தடுக்கும் விதமாக பழனி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் தலையிட்டு உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும் என வாக்குறுதி அளித்ததன் பேரில் போராட்டங்கள் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )