மாவட்ட செய்திகள்
ஆத்தூர்-ஒருங்கிணைந்த பூச்சி கொல்லி மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு மாணவர்கள் செயல்விளக்கம்.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா அளவிலான தோட்டக்கலை கல்லூரி மாணவர்கள் பூச்சி மேலாண்மை குறித்து செயல்விளக்கம் அளித்தனர் .இதில் பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் தினேஷ், எழில் வரதன், பாலகிருஷ்ணன், ஆதிநாதன் ,ஜேம்ஸ் ஆகியோர் கிராம திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டு விவசாயிகளுக்கு தென்னையில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை பற்றிய விளக்கம் கொடுத்தனர்.
தென்னை பாக்கு பூச்சிகளான காண்டாமிருக வண்டு, கூன் மூக்கு வண்டு, போன்றவற்றை ரசாயன மருந்துகள் மட்டும் இல்லாமல் உழவியல் முறைகள் உயிரியல் முறைகள் விளக்குப்பொறி இனக்கவர்ச்சிப் பொறி போன்றவற்றைக் கொண்டு கட்டுப்படுத்தும் வழிமுறைகளையும் செயல் விளக்கம் செய்து காட்டினர். உயிரியல் முறையில் மெட்டாரைசியம் அணிசொப்லியே என்ற உயிர் பூஞ்சானக் கொல்லி பயன்படுத்தி காண்டாமிருக வண்டின் புழுக்களை கட்டுப்படுத்தவும் அந்துப்பூச்சி உருண்டையை பயன்படுத்தி காண்டாமிருக வண்டுகள் மரங்களைத் தாக்குவதை குறைக்கவும் இனக்கவர்ச்சி பொறி பயன்படுத்தி காண்டாமிருக வண்டுகள் மற்றும் கூன் வண்டுகளை அழிக்கவும் அறிவுறுத்தினர். மேலும் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முக்கியத்துவம் பற்றி அதனால் அடையும் பயன்கள் பற்றிய விவசாய விரிவாக்கம் அளித்தனர். இதில் சித்தையன் கோட்டை, சேடப்பட்டி, அழகர் நாயக்கம்பட்டி, புதுப்பட்டி, நரசிங்கபுரம் சித்தரேவு விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.