முதுகுளத்தூர் அருகே 7 ஆண்டுகளாக பூட்டி கிடந்த கோயில் வட்டாட்சியர் முன்னிலையில் திறக்கப்பட்டது:
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள சித்திரங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட இறைச்சி குளம் கிராமத்தில் பேராயிர மூர்த்தி அய்யனார் கோவில் உள்ளது.இங்கு ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் குதிரை எடுப்பு விழா விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம் .இந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு இறைச்சிகுளம் கிராமத்தில் சில பிரச்சனை காரணமாக கோவிலில் மூடப்பட்டது.
இதன் அடிப்படையில் அந்த கிராமத்தில் இரு தரப்பினராக செயல்பட்டு வருவதால் பிரச்சனை வரக்கூடாது என்பதற்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கோயில் பூட்டப்பட்டிருந்தது .இந்த சூழ்நிலையில் முதுகுளத்தூர் வட்டாட்சியர் தலைமையில் பல்வேறு கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் உடன்பாடு ஏற்படவில்லை.
இதன் அடிப்படையில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் முதுகுளத்தூர் வட்டாட்சியர் சடையாண்டி முன்னிலையில் 7ஆண்டுகளாக போட்டி கிடந்த பேராயிர மூர்த்தி அய்யனார் கோவில் திறக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கோவில் திறந்த பின்பு சூடம் ஏற்றி வழிபாடு செய்தனர்.
இந்தக் கோவில் திறப்பின் போது முதுகுளத்தூர் காவல் ஆய்வாளர் துரைப் பாண்டியன், வருவாய்த் துறையினர், காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். பின்பு பேராயிர மூர்த்தி அய்யனாருக்கு தீபாரதனை காண்பிக்கப்பட்டு மாலை அணிவித்து அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் சாமி தரிசனம் செய்தது நெநிகழ்ச்சியை ஏற்படுத்தியது.