மூன்றாம் ஆண்டு முளைப்பாரி மற்றும் பால் குட திருவிழா
மூன்றாம் ஆண்டு முளைப்பாரி மற்றும் பால் குட திருவிழா
ஜாதி சமயங்களைக் கடந்து உலக மரத்தால் காளியம்மனை வழிபடும் உலகநாதபுரம் மக்கள்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே அமைந்துள்ளது உலகநாதபுரம் இங்கு கால்நடைகளை மேய்க்கும் ஆயர் ஒருவரால் உலக மரத்தால் காளியம்மன் அழைத்து வரப்பட்டதாகவும் இந்த அம்மன் இலவம் பஞ்சு மரத்தில் அமர்ந்ததால் உலக மரத்தால் என பெயர் பெற்றதாகவும் அதனை தழுவியே உலகநாதபுரம் என இந்த ஊருக்கு பெயர் பெற்றதாகவும் சொல்லப்படும் நிலையில் உலக மரத்தால் காளியம்மன் ஆலயத்தின் அருகே உள்ள ஊரணியில் தாகம் போக்குவதற்கு இந்த அம்மன் செப்பு குடம் ஒன்றில் குழந்தை வடிவில் தண்ணீர் எடுத்து செல்வதை இரவு நேரங்களில் பலர் பார்த்ததாகவும் குழந்தை வடிவில் வந்து ஆச்சரியங்களையும் அமானுஷ்யங்களையும் பல அதிசயங்களையும் இந்த அம்மன் செய்து வருவதாக பக்தர்கள் பலரும் மெய்சிலிர்க்க தெரிவித்தனர் கேட்ட வரங்களை இங்குள்ள அம்மன் வாரி வழங்குவதால் பக்தர்கள் பலரும் பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தி வருகின்றனர் இந்த நிலையில் மூன்றாம் ஆண்டு முளைப்பாரி மற்றும் பால்குட திருவிழா நடைபெற்றது முன்னதாக ஆடிப்பூரம் என்பதால் இரவு அம்மனுக்கு மஞ்சள் கயிறால் பிணைக்கப்பட்ட வளையல்களை அம்மனிடம் வைத்து வழிபட்டு பெண்கள் அணிந்து கொள்கின்றனர் அதனைத் தொடர்ந்து கரகமானது ஊரணியில் எடுக்கப்பட்டு ஊர்வலமாக கொண்டு வந்து அம்மனிடம் வைத்து வழிபாடு செய்தனர் பின்னர் பால்குடம், முளைப்பாறியை பெண்கள் ஊர்வலமாக சுமந்து வந்து அம்மனிடம் வைத்து கும்மியடித்தும்,ஆண்கள் ஒயிலாட்டம் ஆடியும் வழிபாடு செய்தனர் தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மஞ்சள் அலங்காரத்தில் காட்சியளித்த உலக மரத்தால் காளியம்மனை சுவாமி தரிசனம் செய்தனர்