BREAKING NEWS

மூப்பனார் 93 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் அன்னாரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

மயிலாடுதுறையில் மறைந்த மக்கள் தலைவர் ஜி கே மூப்பனார் 93 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் அன்னாரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம் :-

மறைந்த மக்கள் தலைவர் ஜி கே மூப்பனாரின் 93 வது பிறந்தநாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது இதனை முன்னிட்டு மயிலாடுதுறையில் அமைந்துள்ள தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட அலுவலகத்தில் அண்ணாரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மயிலாடுதுறை வேதாரண்யம் தொகுதி தலைவர் எஸ் கார்த்திகேயன் பிள்ளை தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மயிலாடுதுறை கிழக்கு மாவட்ட தலைவர் பூம்புகார் சங்கர் முன்னிலை வகித்தார்.நிகழ்ச்சியில் தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.தொடர்ந்து தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது நிகழ்ச்சியில்,மாநில செயற்குழு சிறப்பு அழைப்பாளர்கள், எல்.ராஜேந்திரன் ராயல் சங்கர், நகரத்தின் சார்பில் முட்டம் குமார் ஆர் எம் எஸ் சஜல் ஜிவி முருகன், ஜிவி பாண்டியன்,விஎஸ் சண்முகம்,எஸ். சீனிவாசன்,ஒளி முகமது உள்ளிட்டோர் பங்கேற்றனர்.வட்டாரத்தின் சார்பில் எம்பி மோகன், டி.சின்னப்பிள்ளை, நடராஜ்,இளங்கோவன்,ரவி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்

Share this…

CATEGORIES
TAGS