மெலட்டூரில் பழைமையான பாகவத மேளா நாடக விழாவில் சதி சாவித்திரி நாடகம் நடைபெற்றது
மாவட்டத்தில் உள்ள மெலட்டூரில் பாகவத மேளா என்கிற தெய்வீக நாட்டிய நாடகக் கலைவிழா 500 ஆண்டுக்கும் மேலாக பாரம்பரியம் மாறாமல் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
மெலட்டூர் பாகவத மேளா நாட்டிய நாடக சங்கம் சார்பில் 84-வது ஆண்டு பாகவத மேளா நாடக கலை விழாவில் முதல் நாளில் பிரகலாதா சரித்திரம் நாடகமும், மறுநாள் தெலுங்கு திரைப்பட நடிகை ஹிமான்ஸி குச்சுபிடி நடனம் மற்றும் இந்து நிதீஷ்குமார் ஆகியோரின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் . 4-5 வது நாள் நிகழ்ச்சியாக ஹரிச்சந்திரா எனும் புராண நாடகமும் 7- வது நாள் நிகழ்ச்சியாக ருக்மணி கல்யாணம் எனும் புராண நாடகமும் நடைபெற்றதுநாடகவிழாவின் எட்டாவது நாள் நிகழ்ச்சியாக அனிதா குஹா குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் அதனை தொடர்ந்து சதி சாவித்திரி எனும் புராண நாடகமும் நடைபெற்றது. பரத நாட்டிய நிகழ்ச்சி மற்றும் நாடகத்தினை உள்ளூர் மற்றும் வெளியூர் கலா ரசிகர்கள் ஏராளமானோர் கண்டு களித்தனர், 29 ந்தேதி வள்ளி திருமணம் எனும் தமிழ் நாடகமும் நடைபெறவுள்ளது. நாடக விழாவுக்கான ஏற்பாடுகளை மெலட்டூர் பாகவத மேளா நாட்டிய நாடக சங்க இயக்குநர் கலைமாமணி எஸ். குமார் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.