BREAKING NEWS

மேட்டூரில் திறக்கப்படும் தண்ணீரை சேமிக்க தமிழக அரசுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள்
சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம்

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள்
சங்கத்தின் மாநில தலைவர் பூவை.விஸ்வநாதன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் போது மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக நீர்வள துறைக்கு சொந்தமான 935 ஏரிகளில் தண்ணீர் இல்லாமல் வறண்டு காட்சியளிக்கிறது.
குறிப்பாக காவிரி டெல்டா மாவட்டங்களான திருச்சி, அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள ஏரிகளில் மேட்டூர் அணையிலிருந்து வரக்கூடிய தண்ணீரை சேமித்து வைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரிகளுக்கு தண்ணீர் வந்து சேரும் வழித்தடங்களை முழுமையாக சீரமைத்து தூர்வாரி ஏரிகளை நிரப்பிட போர்க்கால அடிப்படையில் அரசு செயல்பட்டால் தான் ஒன்றரை லட்சம் கன அடி தண்ணீர் விவசாயிகளுக்கு பயன்படாமல் கடலில் நேரடியாக சென்று கலப்பதை தடுக்க முடியும் எனவே தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எதுமலையில் 100நாள் வேலை பாகுபாடு இன்றி வழங்கி அதற்குரிய தின கூலியை அரசு அறிவித்தபடி வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

அதனை தொடர்ந்து காவல்துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அதிகாரிகளிடம் மனு கொடுப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

Share this…

CATEGORIES
TAGS