மேலப்பாளையம் பஜார் திடலில் இலவச ஹோமியோபதி மருத்துவ முகாம்.

திருநெல்வேலி மேலப்பாளையத்தில் இலவச ஹோமியோபதி மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மேலப்பாளையம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் பொன்ராஜ் தொடங்கி வைத்தார்.
மேலப்பாளையம் 44 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஹாபிஸ் என்கிற ஹாப்ஸாவும் உடன் இருந்து நிகழ்ச்சியை துவங்கினார்.
இந்நிகழ்ச்சியின் துவக்கத்தில் மூலன் அகமது பிள்ளை தெரு நலச்சங்க ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான மீரான் அனைவரையும் வரவேற்றார். ராசிக் பைஜி துவக்க உரை நிகழ்த்தினார். இதில் மூலன்அகமது பிள்ளை தெரு நலச்சங்க செயல்பாடுகள் குறித்து விளக்கி பேசினார்.
காவல் ஆய்வாளர் பொன்ராஜ் சிறப்பு உரை நிகழ்த்தினார்.அவர் தனது உரையில் மூலன் அகமது பிள்ளை தெரு நலச்சங்கத்தின்(MAPS ன்) பணியை வெகுவாக பாரட்டி பேசினார்.
வைகரை ஹோமியோபதி மருத்துவர் பாலச்சந்தர் ஹோமியோபதி தொடர்பான விழிப்புணர்வு குறித்து பேசினார். காவல் ஆய்வாளர் பொன்ராஜ் சிகிச்சையை தொடங்கி வைத்தார் அதைதொடர்ந்து முகாமில் பங்கேற்றவர்களுக்கு சிகிச்சை நடைபெற்றது.
இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியை சிறப்பான முறையில் ‘மேப்ஸ்'(மூலன் அகமது பிள்ளை தெரு நலச்சங்கம்) ஒருங்கிணைப்பாளர்களான ரசூல், தமீம், ஆசிக், அப்துல் காதர்,நியாஸ், அலி பாதுஷா ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்நிகழ்ச்சியின் களப்பணிகளை ஒரு வார காலமாக மூலன் அகமது பிள்ளை தெரு நலச்சங்கம் (மேப்ஸ்) தொண்டர் அணியினர் செய்திருந்தனர்.