மோடியை வீட்டுக்கு அனுப்புவோம்! மத்தியில் ராகுல்காந்தி தலைமையில் ஆட்சி, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு
பாபநாசம் சட்டமன்ற தொகுதி அம்மாபேட்டை ஒன்றியத்தில் கத்திரி நத்தம் ஊராட்சியில் தேர்தல் பணிமனையை தமிழ் நாடு பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
அதனை தொடர்ந்து சாலியமங்களம், அம்மாபேட்டை, மெலட்டூர், வடக்கு மாங்குடி பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சுதாவுக்கு கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசினார்.
அப்போது மோடியை வீட்டுக்கு அனுப்புவோம் ராகுல்காந்தி தலைமையில் மத்தியில் ஆட்சி அமைப்போம் என பேசினார். வாக்கு சேகரிப்பின் போது முன்னாள் அமைச்சர் மதிவாணன், எம்பிக்கள் எஸ்.கல்யாணசுந்தரம், ராமலிங்கம், அரசு கொறடா கோவி செழியன்.
பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா, அம்மாபேட்டை ஒன்றிய பெருந்தலைவர் கே.வீ. கலைச்செல்வன், ஒன்றிய செயலாளர்கள் தியாக சுரேஷ், குமார்
மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.