BREAKING NEWS

ரம்ஜான், தெலுங்கு வருடப் பிறப்பையொட்டி, போச்சம்பள்ளி வாரச்சந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை

ரம்ஜான், தெலுங்கு வருடப் பிறப்பையொட்டி, போச்சம்பள்ளி வாரச்சந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை

 

கர்நாடகா, ஆந்திர மாநில எல்லையையொட்டி அமைந்தள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி நிகழாண்டில் யுகாதி பண்டிகை வரும் 9ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதேபோல் அகரம் அருகே நடைபெறும் அரியக்கா, பெரியக்கா கோவில் திருவிழாவும் வரும் 9 மற்றும் 10ம் தேதிகளில் கொண்டாடப்படுகிறது. மேலும் வருகின்ற 11ம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இதன் காரணமாக போச்சம்பள்ளி வாரச்சந்தையில் வழக்கத்தைவிட ஆடுகள் விற்பனை இரண்டு மடங்கு கூடுதலாக விற்பனையானது. ஆடுகள் வாங்கவும் விற்கவும் உள்ளூர் மட்டுமின்றி வெளிமாநில வியாபாரிகள் அதிகளவில் வந்திருந்தனர். 20 ஆயிரத்திற்கும் அதிகமான அடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். 10 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.12 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை விற்பனையானது. இதேபோல் எடைக்கு ஏற்றவாறு குறைந்தபட்சம் ஒரு ஆடு ரூ.6 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.45 ஆயிரம் வரை விற்பனையானது. போச்சம்பள்ளி அருகே உள்ள அகரம் கிராமத்தில் 9ம் தேதி முதல் 10ம் தேதி வரை நடைபெறும் அரியக்கா பெரியக்கா கோவில் திருவிழாவில் குட்டி ஆடுகளை நேர்த்தி கடனாக செலுத்துவதற்காக அதிக அளவில் குட்டி ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தன. சராசரியாக ரூ.3 ஆயிரம் விலை போகக்கூடிய குட்டி ஆடுகள் இன்று ரூ.5 வரை விற்பனையாயின.

இன்று ஒரே நாளில் 10த்தற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனையானதால் ரூ.5 கோடி வரை வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். வழக்கத்தைவிட ஒரு ஆட்டின் விலை ரூ.3 ஆயிரம் கூடுதலாக விற்பனையானதால் கால்நடைகள் வளர்க்கும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். இதனால் ஆட்டிறைச்சியின் விலையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

மக்களவை தேர்தல் வதிமுறைகள் அமலில் உள்ளதால் ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் பணம் கொண்டு செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் போச்சம்பள்ளி வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை செய்த விவசாயிகளுக்கு, வியாபாரிகள் பலர் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மூலம் பணத்தை பரிமாரிக்கொண்டனர்

Share this…

CATEGORIES
TAGS