ரூபாய் 17 லட்சம் மதிப்பிலான பல்வேறு திட்ட பணிகளை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
கோவில்பட்டி அருகே சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 17 லட்சம் மதிப்பிலான பல்வேறு திட்ட பணிகளை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள பாண்டவர் மங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தாசில்தார் நகர் பாலாஜி நகர் 1,2,3,வது தெருவில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் இருந்து ரூபாய் 28 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலையை மற்றும்
கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி பஞ்சாயத்து சிந்தாமணி நகர் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 12.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாய விலைக் கடையை முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். தொடர்ந்து கோவில்பட்டி அருகே விஜயாபுரி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 14 லட்சம் மதிப்பில் புதிதாக பேவர் பிளாக் சாலையை அமைக்கும் பணிகளை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில் மத்திய ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி,கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜ்,ஆவின் கூட்டுறவு சங்கத் தலைவர் தாமோதரன், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் சங்கர் கணேஷ், மேற்கு ஒன்றிய செயலாளர் அழகர்சாமி,நகர்மன்ற உறுப்பினர் கவியரசன், உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.