வடக்குமாங்குடி மகா காளியம்மன் கோயில் திருநடன திருவிழா கிராம மக்கள் பக்தி பரவசத்துடன் வழிபாடு

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, வடக்குமாங்குடி கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஶ்ரீ மகா காளியம்மன் கோவில் திருநடன திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருநடன திருவிழாவை முன்னிட்டு அகரமாங்குடி பொய்கை ஆற்றங்கரையில் இருந்து கிராம வாசிகள் முன்னிலையில் காளியம்மன் புறப்பாடு சகல வாத்தியங்களுடன் புறப்பட்டு முக்கிய வீதிகள், தெருக்கள் வழியாக இரவு முழுவதும் வீதியுலா நடைபெற்றது கிராமமக்கள் மாகாளியம்மனை மலர் தூவி வணங்கினர். வீதியுலா நிறைவுற்றதும் அம்மன் கோயில் வந்தடைந்தது.
தொடர்ந்து அம்பாளுக்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை வடக்கு மாங்குடி, கிராம வாசிகள் செய்து இருந்தனர்.