வர்த்தகம்
சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை.
வருமானவரித்துறை அதிகாரிகள் சென்னையில் பல இடங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் வருமான வரித்துறையினர் புரசைவாக்கம், மேடவாக்கம், சோமங்கலம் உள்ளிட்ட பல இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் புரசைவாக்கத்தில் உள்ள சுரேஷ் லால்வானி என்ற பைனான்சியர் வீட்டில் 10 அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மேடவாக்கம் அருகே உள்ள ஈ கே குழுமத்திற்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
அதுமட்டுமல்ல ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டிலுள்ள ஏ.வி.சாரதி என்ற திமுகவை சேர்ந்த தொழிலதிபர் வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதனை அடுத்து ஸ்ரீபெரும்பத்தூர் அருகே உள்ள சோமங்கலத்தில் உள்ள ஜே.கே.குவாரியில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
CATEGORIES வர்த்தகம்