BREAKING NEWS

வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் போராட்டம்

வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் போராட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் ராணிப்பேட்டை மாவட்ட வழக்கறிஞர் சங்கம் சார்பில் குற்றவியல் சட்டம் மாற்றங்களை திரும்ப பெற வேண்டும்,புதிய சட்ட அமலாக்கத்தை நிறுத்திட வேண்டும், வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அறப்போராட்டம் நடைபெற்றது.

 

நீதிமன்றத்தின் வழக்கறிஞர் சங்கத் தலைவர் சுரேந்திரன் தலைமையில் நடைபெற்ற அறப்போராட்டத்தில் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் முழக்கங்களை எழுப்பினர். வழக்கறிஞர்களின் போராட்டம் காரணமாக நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு காணப்பட்டது.

Share this…

CATEGORIES
TAGS