வாணாபுரம் அருகே ஸ்ரீ வரம் தரும் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் வட்டத்திற்குட்பட்டது மேலத்தேனூர் கிராமம். இந்த கிராம எல்லையில் லாலாபேட்டை – கீழத்தேனூர் செல்லும் சாலையொட்டி புதியதாக ஸ்ரீ வரம் தரும் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் கட்டப்பட்டு வந்தது.
இந்நிலையில், இந்த ஆலயத்திற்கு கும்பாபிஷேகம் செய்யும் வகையில் நேற்றைக்கு முன்தினம் கணபதி ஹோமத்துடன் தொடங்கப்பட்ட யாக சாலையில் கோபூஜை இரண்டாம் கால யாகசாலை பூஜை, மகாபூர்ணா ஹதி மகா தீபாரதனை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது.
மேலும், அதனைத் தொடர்ந்து கணம் புறப்பட்டு ஸ்ரீ வரம் தரும் அங்காள பரமேஸ்வரி ஆலய மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்வில், மேல தேனூர் கிராமத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.