BREAKING NEWS

விஜய் ஆண்டனியின் `வள்ளி மயில்’ ஷூட்டிங் தொடங்கியது

விஜய் ஆண்டனியின் `வள்ளி மயில்’ ஷூட்டிங் தொடங்கியது.

விஜய் ஆண்டனியின் `வள்ளி மயில்’ ஷூட்டிங் தொடங்கியது

விஜய் ஆண்டனி, சத்யராஜ், பாரதிராஜா இணைந்து நடிக்கும் ‘வள்ளி மயில்’ படத்தின் ஷூட்டிங் திண்டுக்கல் அருகே இன்று தொடங்கியது

ஜெய் நடித்த ‘வீரபாண்டியபுரம்’, ‘குற்றம் குற்றமே’ படங்களுக்குப் பிறகு சுசீந்திரன் இயக்கும் படம், ’வள்ளி மயில்’. இதில், விஜய் ஆண்டனி , சத்யராஜ், பாரதிராஜா இணைந்து நடிக்கின்றனர். நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தாய் சரவணன் தயாரிக்கும் இந்தப் படத்தில், ஃபரியா அப்துல்லா நாயகியாக நடிக்கிறார். இவர், தெலுங்கில் வெளியான ‘ஜதி ரத்னலு’ படத்தில் நடித்தவர்.

ஃபரியா அப்துல்லா

மற்றும் ‘புஷ்பா’ புகழ் சுனில், தம்பி ராமையா, ரெடின் கிங்ஸ்லி, சிங்கம் புலி, அறந்தாங்கி நிஷா முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். படத்துக்கு டி.இமான் இசை அமைக்கிறார். விஜய்.கே.சக்கரவர்த்தி ஒளிப்பதிவு செய்கிறார். 1980-ம் கால கட்டப் பின்னணியில் நடக்கும் கதையாக படம் உருவாகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியாக இருக்கிறது. முதல் கட்ட படப்பிடிப்பு திண்டுக்கல்லில் இன்று காலை தொடங்கியது.

தமிழ்நாடு உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி, படப்பிடிப்பை கிளாப் அடித்து தொடங்கி வைத்தார். திண்டுக்கல்லில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கூத்தம்பூண்டியில் உள்ள சிவன் கோயிலில் ஆரம்பமான இதன் படபிடிப்பு, திண்டுக்கல்லைச் சுற்றித் தொடர்ந்து 30 நாள்கள் நடைபெறுகிறது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )