BREAKING NEWS

விளாத்திகுளம் அருகே கடன் வாங்கிய பணத்தை திருப்பி தருவதாக ஆசை வார்த்தை கூறி பைனான்சியர் கடத்தி கொலை.

விளாத்திகுளம் அருகே கடன் வாங்கிய  பணத்தை திருப்பி தருவதாக  ஆசை வார்த்தை கூறி பைனான்சியர் கடத்தி கொலை.

கடன் வாங்கிய பணத்தை திருப்பி தருவதாக சாயல்குடியை சேர்ந்த பைனான்சியர் நாகஜோதியை ஆசை வார்த்தை கூறி காரில் விளாத்திகுளம் அழைத்து வந்து கழுத்தை கயிறால் இறுக்கி கொலை செய்து கார் டிக்கியில் சடலத்தை வைத்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தனர். இச்சம்பவம் தொடர்பாக கார் ஓட்டுநர் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் உள்ள குளத்தூர் கிழக்கு கடற்கரை சாலையில் கலைஞானபுரம் காட்டுப் பகுதியில் கார் ஒன்று நள்ளிரவு நேரத்தில் எரிந்து கொண்டு இருப்பதை கண்டு அவ்வழியாக சென்றவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற விளாத்திகுளம் டிஎஸ்பி ஜெயச்சந்திரன் தலைமையிலான போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் காரில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்க முயன்ற போது அங்கு காரின் டிக்கியில் ஆண் சடலம் ஒன்று எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தண்ணீரை ஊற்றி தீயை அணைத்த போலீசார் சம்பவ இடத்துக்கு போலீஸ் மோப்ப நாய் மற்றும் தடவியல் நிபுணர்களை வரவழைத்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும் காரின் அருகே கிடந்த ஆண்ட்ராய்டு மொபைல் போனை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினர்.முக்கால்வாசி எரிந்த நிலையில் கிடந்த சடலத்தை தடயவியல் துறை உதவி இயக்குநர் கலா லட்சுமி தலைமையிலான நிபுணர்கள் சம்பவ இடத்தில் வைத்தே பரிசோதனைகள் நடத்தினர். இதில் கழுத்தில் கயிறு இறுக்கி கொலை செய்யப்பட்டிருப்பதற்கான முக்கிய தடயங்கள் அறிகுறிகள் காணப்பட்டதை சேகரித்தனர். இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் நள்ளிரவில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

காரின் பதிவெண்ணை கொண்டுபோலீசார் நடத்திய விசாரணையில், ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்த சின்னசாமி மகன் நாகஜோதி (48) என்பவருக்கு சொந்தமான கார் என்பதும், பைனான்சியர் தொழிலில் ஈடுபட்டு வந்த நாகஜோதியிடம் கார் ஓட்டுநராக இருந்து வந்த கன்னிராஜபுரத்தை சேர்ந்த மைக்கேல் ராஜ் (27) என்பவர் ரூபாய் 2 லட்சம் கடன் வாங்கியதாகவும், மேற்படி வாங்கிய கடனுக்கு சாயல்குடியைச் சேர்ந்த மைக்கேல்ராஜ் என்ற மாரீஸ் (28) ஜாமீன் கையெழுத்து போட்டு உள்ளார்.இந்த நிலையில் வாங்கிய பணத்தை மைக்கேல்ராஜ் கொடுக்க முடியாமல் போக பைனான்சியர் நாகஜோதி கடந்த 6ஆம் தேதியன்று ஜாமீன் கையெழுத்து போட்ட மைக்கேல் ராஜ் என்ற மாரீஸை சிறை பிடித்து வைத்துள்ளார். இதனால் கடன் வாங்கிய மைக்கேல்ராஜ், இவரது சகோதரர் குழந்தை கனி (26), ஜாமீன் கையெழுத்து போட்ட மைக்கேல்ராஜ் என்ற மாரீஸ் மற்றும் இவர்களது கூட்டாளி கன்னிராஜபுரத்தைச் சேர்ந்த கணபதி (29) ஆகிய 4 பேர் சேர்ந்து பைனான்சியர் நாகஜோதியிடம் வாங்கிய கடன் இரண்டு லட்சத்தை வட்டியுடன் சேர்த்து திருப்பி தருவதாக
ஆசை வார்த்தைகளை கூறி ஏமாற்றி விளாத்திகுளம் அழைத்து வந்து வரும் வழியிலேயே காரில் வைத்து பைனான்சியர் நாகஜோதியின் கழுத்தை கயிறால் இறுக்கி கொலை செய்துள்ளனர். பின்னர் பகல் முழுவதும் கார் டிக்கியில் சடலத்தை வைத்து கொண்டு எரிப்பதா அல்லது புதைப்பதா என்ற கோணத்தில் சிந்தித்துக் கொண்டே விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 100 கிலோ மீட்டர் வரை சடலத்துடன் சுற்றியுள்ளனர். பின்னர் இரவு நேரத்தில் குளத்தூர் கிழக்கு கடற்கரை சாலை கலைஞானபுரம் காட்டுப்பகுதியில் காரை நிறுத்தி பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துவிட்டு தப்பி தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது.இது தொடர்பாக குளத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவத்தில் தொடர்புடைய கார் ஓட்டுநர் மைக்கேல் ராஜ், அவரது சகோதரர் குழந்தை கனி, மைக்கேல் ராஜ் என்ற மாரீஸ், கணபதி ஆகிய நான்கு பேரை கைது செய்து விளாத்திகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்

Share this…

CATEGORIES
TAGS