விளையாட்டு செய்திகள்
மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் முதுகுளத்தூர் மாணவர்கள் வெற்றி .

மதுரை பாத்திமா கல்லூரி விளையாட்டு அரங்கத்தில்(06:03:2022) நடைபெற்ற சிலம்பப் போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியின் தலைமை நடுவராக தமிழ் பாரம்பரிய சிலம்பப் பள்ளியின் பொதுச்செயலாளர் ஆசான் சுரேஷ்குமார் செயல்பட்டார். இப்போட்டியில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தர்ம முனீஸ்வரர் சிலம்ப கூடத்தை சேர்ந்த மாணவர்கள் 11 தங்கப்பதக்கமும் 15 வெள்ளி பதக்கமும் 2 வெண்கலப் பதக்கமும் பெற்று சாதனை படைத்தனர். வெற்றி பெற்ற மாணவர்களை முதுகுளத்தூர் தர்ம முனீஸ்வரர் சிலம்ப கூடத்தின் பயிற்சியாளர் ஜீவா மற்றும் முதுகுளத்தூர் சரக துணை கண்காணிப்பாளர் சின்னக்கண்ணு,இன்ஸ்பெக்டர் மோகன், கீரனூர் ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் சண்முகவள்ளி திருப்பதி ஆகியோர் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்கள். பாராட்டு விழாவில் பெற்றோர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
