விளையாட்டு செய்திகள்
ஐசிசி தரவரிசை பட்டியல். மீண்டும் இந்திய வீரர்கள் முன்னேற்றம்- அசத்தும் ஜடேஜா !
ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. அதன்படி, பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லாபஸ்சாக்னே (916 புள்ளி) முதலிடம் பிடித்துள்ளார். இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் (876 புள்ளி) 2வது இடம் பிடித்துள்ளார். ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் (857 புள்ளி) மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா (754 புள்ளி) 7வது இடத்திலும், விராட்கோலி (742 புள்ளி) 8-வது இடத்திலும், ரிஷப் பண்ட் 10வது இடத்திலும் உள்ளார்.
பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் (886 புள்ளி) முதலிடத்தில் உள்ளார். இந்திய அணியின் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் (850 புள்ளி) 2-வது இடத்தில் உள்ளார். தென்ஆப்பிரிக்கா வீரர் ரபாடா (835 புள்ளி) 3-வது இடத்தில் உள்ளார். இந்தியனின் வீரர் பும்ரா (830 புள்ளி) 4-வது இடத்தில் உள்ளார்.
ஆல்-ரவுண்டர்கள் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா 385 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜேசன் ஹோல்டர் 357 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். இந்திய அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 341 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளார். ஏற்கெனவே முதலிடத்தில் இருந்த ஜடேஜா கடந்த வாரம் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வீரர் ஜேசன் ஹோல்டரிடம் அந்த இடத்தை இழந்தார். இந்தச் சூழலில் தற்போது மீண்டும் அவர் முதலிடத்தை பிடித்துள்ளார்.
அதேபோல் ஒருநாள் போட்டிகளுக்கான ஆல்ரவுண்டர்கள் தரவரிசைப் பட்டியலில் ஜடேஜா தொடர்ந்து 10ஆவது இடத்தில் நீடிக்கிறார். அவர் 10ஆவது இடத்தை ஜிம்பாவே நாட்டைச் சேர்ந்த சியன் வில்லியம்ஸ் உடன் பகிர்ந்துள்ளார். ஒருநாள் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தொடர்ந்து இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார்.
அந்தப் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஒரு இடம் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளார். ஒருநாள் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ரோகித் சர்மா 4ஆவது இடத்தில் உள்ளார். ஒருநாள் போட்டிகளில் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் பும்ரா மட்டும் டாப் 10 இடங்களில் இருக்கிறார். அவர் தற்போது 6ஆவது இடத்தை பிடித்துள்ளார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.