விளையாட்டு செய்திகள்
2026 காமன்வெல்த் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெறும்!!

2026ம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் உள்ள விக்டோரியா மாகாணத்தில் நடைபெற இருக்கிறது.காமன்வெல்த் நாடுகள் என்பது இங்கிலாந்து ஆட்சியின் கீழ் இருந்த நாடுளின் கூட்டமைப்பாகும். இதன் தலைமையகம் லண்டனில் அமைந்துள்ளது.
இந்த நாடுகள் பங்குபெறும் விளையாட்டு போட்டிகளே காமன்வெல்த் போட்டிகளாகும். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த போட்டிகள் நடத்தப்படுகின்றன. சர்வதேச நாடுகளின் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் இந்த போட்டிகளில் கலந்து கொள்கிறார்கள்.ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் 2026ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.

ஆஸ்திரேலியாவில் இதுவரை 5 முறை காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்றுள்ளது. இது 6வது முறையாகும். அதேபோல் விக்டோரியா மாகாணத்தில் இந்த போட்டிகள் 2ம் முறையாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.ஜீலாங், பெண்டிகோ, பல்லாரட், கிப்ஸ்லாண்ட் ஆகிய விக்டோரியா மாகாண பகுதிகளில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற உள்ளது.
இதற்கு முந்தைய காமன்வெல்த் போட்டிகள் வருகிற ஜூலை மாதம் 28ம் தேதி முதல் ஆகஸ்டு 8ம் தேதி வரை காமன்வெல்த் போட்டிகள் நடைபெற உள்ளது. இங்கிலாந்தில் நடைபெற உள்ள இந்த போட்டியில் 72 சர்வதேச நாடுகளை சேர்ந்த 5,054 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
