BREAKING NEWS

விவசாயம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமமையில், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அதிகார அமைப்பின் முதல் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமமையில், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அதிகார அமைப்பின் முதல் கூட்டம் இன்று நடைபெறுகிறது. டெல்டா மாவட்டங்களை ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களில் இருந்து பாதுகாக்கும் நடவடிக்கை காரணமாக பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அமைப்பானது உருவாக்கப்பட்டது.

 

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு உட்பட்ட, காட்டுமன்னார்கோவில், அறந்தாங்கி உள்ளிட்ட பல வட்டாரங்கள் இடம்பெறும் என்று கடந்த 2020-ம் ஆண்டு என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.

மீத்தேன், மென்களிக்கல் எரிவாயு மற்றும் ஹைட்ரோ கார்பன் உள்ளடங்கிய இயற்கை வாயுக்களின் ஆய்வு, துளைத்தல் மற்றும் பிரித்தெடுத்தல், கப்பல் உடைக்கும் தொழிற்சாலை ஆகியவை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலங்களில் தொடங்க முடியாது. என்றும் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

அவ்வாறு பாதுகாப்பு மண்டல்களில் இதுபோன்ற தொழிற்சாலைகள் நிறுவப்படும் பட்சத்தில் இயற்கைக்கு மாறான விளைவுகளை ஏற்படுத்தும், மேலும் வேளாண்மை பெரிதளவில் பாதிக்கப்படும் என்று டெல்டா மாவட்ட மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்தனர்.

இதைத்தொடர்ந்து முதல்வர் தலைமையிலான 24 பேர் கொண்ட பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அதிகார அமைப்பு, இச்சட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்ற அமைக்கப்பட்டது.

இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமை செயலகத்தில், வேளாண் மண்டல அதிகார அமைப்பின் முதல் கூட்டம் நடைபெறுகிறது. முக்கிய அமைச்சர்கள், தலைமை செயலாளர் இறையன்பு, துறை செயலாளர்கள் உயர் அரசு அதிகாரிகள் இக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

 

இந்த கூட்டத்தில் பாசனம் மற்றும் வெள்ள நீர் மேலாண்மை திட்டங்கள், உணவு பாதுகாப்பிற்கான உள்கட்டமைப்புளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள், வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த தொழில் மேம்பாடு குறித்தும் முதல்வர், அதிகாரிகளுடன் விவாதம் நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டத்திற்கு பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு அடுத்த கட்ட நடவடிக்கைகளை, கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு செயல்படுத்துவார் என்று கூறப்படுகிறது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )