BREAKING NEWS

வேலூரில் கோடை கால சிலம்ப சிறப்பு பயிற்சி முகாம்: ஆர்வத்துடன் பங்கேற்ற சிறுவர், சிறுமியர்!

வேலூரில் கோடை கால சிலம்ப சிறப்பு பயிற்சி முகாம்: ஆர்வத்துடன் பங்கேற்ற சிறுவர், சிறுமியர்!

வேலூர் பழைய காட்பாடியில், சிங்கத்தமிழன் சிலம்பம் அகாடமியின், கோடை விடுமுறை சிறப்பு சிலம்ப பயிற்சி வகுப்புகள் தொடங்கியது.
கோடை காலத்தில் மாணவர்களிடையே தற்காப்பு கலையை வளர்க்கும் நோக்கில், இந்த பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. மாணவர்களுக்கான சிலம்ப பயிற்சி அளிக்கப்படுகிறது. இம்முகாம் மே மாதம் 7- முதல் மே 30 வரை நடைபெற உள்ளது.
பயிற்சி வகுப்பில் மாணவர்களுக்கு ஒற்றைக்கம்பு வீச்சு, இரட்டைக்கம்பு வீச்சு, வேல்கம்பு வீச்சு, சுருள்வாள் வீச்சு, வாள் வீச்சு, மான்கொம்பு வீச்சு முதலான போர்க்கலை பயிற்சிகள் பயிற்றுவிக்கப்படுகிறது. 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயிற்சிகளை மேற்கொண்டனர். பயிற்சி வகுப்புகள், நிறுவனர் மற்றும் தலைமை பயிற்சியாளர் டி..அரவிந்தன் மேற்பார்வையில் நடைபெற்றது. பயிற்சியாளர்கள் கே.
திவாகர், ஜி. புவனேஷ், டி. விக்னேஷ்வரன், ஆர். லோகநாதன் மற்றும் எஸ். சஞ்சய் உடனிருந்தனர்.

Share this…

CATEGORIES
TAGS