ஸ்ரீ கிருஷ்ணா நகை மாளிகை 24 கேரட் தூய தங்கத்தை மதுரையில் அறிமுகப்படுத்தியது.

26 ஆண்டுகளுக்கு முன்பு சிறிய நகைக்கடையாக ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீ கிருஷ்ணா நகை மாளிகை பிரைவேட் லிமிட்டெட் இன்று 6000 சதுர பரப்பளவை கொண்ட பெரிய நகைக்கடையாக வளர்ந்துள்ளது. வாடிக்கையாளரின் பெரும் ஆதரவு மற்றும் வரவேற்பைத் தொடர்ந்து 2 கிளைகளைத் துவங்கியது. 2014ஆம் ஆண்டு மேலூரிலும், 2016 ஆம் ஆண்டு மேலமாசி வீதியிலும் அதன் கிளைகளைத் துவங்கியது. வாடிக்கையாளர்களுக்கு தங்கம், வெள்ளி, பிளாட்டினம் என அனைத்து வகையாக நகைகளையும் வழங்கி வருகிறது. நுணுக்கமான கைவினைதிறனால் இந்த சாதனை சாத்தியமாகியுள்ளது.
இன்று ஸ்ரீ கிருஷ்ணா நகை மாளிகை பிரைவேட் லிமிட்டெட் 24கேரட் தூய தங்கத்தை அதன் தெற்கு ஆவணி மூல வீதியில் உள்ள கிளையில் அறிமுகப்படுத்தியது. 24 கேரட் தங்கம் விற்பனையை உலகத் தரம் வாய்ந்த தயாரிப்புகளை உருவாக்கும் MMTC-PAMP INDIA PVT LTD-ன் தலைவர் திரு. சன்கனீல் போராஹ் அவர்கள் ஸ்ரீ கிருஷ்ணா நகை மாளிகையின் இயக்குனர் திரு. செல்வம் முன்னிலையில் துவக்கி வைத்தார். வாடிக்கையாளர்கள் அவர்களின் தேவைக்கேற்ப விரும்பும் படங்களைப் பதித்து தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களை பெறலாம். நாணயங்களின் விலை ரூ.999 முதல் ஆரம்பிக்கிறது.
இந்நிகழ்ச்சியில் பேசிய MMTC-PAMP INDIA PVT LTD -ன் தலைவர் திரு. சன்கனீல் போராஹ், “24 கேரட் தூய தங்க விற்பனையை துவக்கி வைப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. ஸ்ரீ கிருஷ்ணா நகை மாளிகை பிரைவேட் லிமிட்டெட் மென்மேலும் வளர எனது வாழ்த்துக்கள்” எனக் கூறினார்.
ஸ்ரீ கிருஷ்ணா நாகை மாளிகையுடன் 2 தசாப்தங்களுக்கும் மேலாக வாடிக்கையாளர்கள் இணைந்து உள்ளனர். வடிவமைப்புகள் தனித்துவமானவை, நேர்த்தியானவை, கிளாசிக் மற்றும் நவநாகரீகமானவை என்று வாடிக்கையாளர்களால் போற்றப்படுகிறது. அவர்கள் அனைத்து வாடிக்கையாளர் எதிர்பார்ப்புகளையும் புரிந்துகொண்டு, அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி இத்தனை ஆண்டுகளாக தங்கள் வாடிக்கையாளர்களின் மனதிலும் இதயத்திலும் இருந்து வருகின்றனர். இது வடிவமைப்புகள், வாடிக்கையாளர் சேவை, தர உத்தரவாதம், விலை மற்றும் பலவற்றின் காரணமாகும். மேற்கூறிய சலுகைகள் மூலம் கடை 100000க்கும் அதிகமான மகிழ்ச்சியான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது.