BREAKING NEWS

ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது

 

 

 

 

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அடுத்த தத்தனூர் பொட்டக்கொல்லை கிராமத்தில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய திருவிழா கடந்த 22/07/2024 அன்று தொடங்கி தொடர்ந்து வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது இதில் இன்று மாவிளக்கு திருவிழா நடைபெற்றது.

இந்த திருவிழாவானது வருடம் தோறும் மண்டகப்படிகாரர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி நடத்தும் 16 நாட்கள் நடத்தப்படும் ஸ்ரீ மகா மாரியம்மன் திருவிழாவானது முதல் நாள் உள்ளூர் ஏரிக்கரையில் இருந்து கரகம் பூவினால் பிரம்மாண்டமாக ஜோடித்து பூங்கரகமாக மேல தாளங்களுடன் மற்றும் வானவேடிக்கையுடன் புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக அம்மன் கோவிலை சென்று அடைந்தது

தொடர்ச்சியாக திருவிழாவானது கலாச்சாரம் மற்றும் மரபு மாறாமல் முறையே 1, 2, 4, 6, 8, 10, 12 ஆகிய நாட்கள் ஊர் பொது மண்டகப்படி திருவிழாவாக கொண்டாடப்பட்டது

3, 5, 7, 9, 11, 13, 14 ஆகிய நாட்கள் அந்தந்த வகையறா வாரியாக மண்டகப்படி வெகு விமரிசையாக நடத்தப்பட்டு 15 வது நாள் ஊர்ப் பெருந்திருவிழாவாக கொண்டாடப்பட்டது.

இதில் விழாவின் கடைசி நாளான இன்று மீண்டும் கரகம் ஏரியில் ஜோடிக்கப்பட்டு பூங்கரகத்தை அம்மனின் தலையில் வைத்து பூஜை செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு பின்னர் பூங்கரகத்தினை வீதி உலா காட்சிக்காக எடுத்துச் சென்றனர். இந்த கரகமானது ஒவ்வொரு வீட்டிலும் பூஜை செய்து மகா மாரியம்மன் கோவிலில் சென்றடைந்தது இதில் ஊரில் உள்ள அனைத்து வகையறாவைச் சார்ந்த ஏராளமான பொதுமக்கள் திரண்டு அம்மனின் அருள் ஆசி பெற்றுச் சென்றனர்.

இதில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க ஜெயங்கொண்டம் காவல்துறை கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் தலைமையில் உடையார்பாளையம் காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், காவல்துறை ஆய்வாளர் பாபு ஆகியோர் வழிநடத்தலின் படி காவலர்கள் பாதுகாப்பு அளித்து இருந்தனர். இதற்காக கிராமத்தினர் நன்றிகள் தெரிவி்த்தனர்.

தமிழ்நாட்டில் எங்கும் பின்பற்றாத புது விதமான கரகத்தினை ஜோடித்து அம்மன் தலையில் வைத்து பூஜித்து, வீதி உலா செல்வது வினோத நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS