BREAKING NEWS

அடையாறு ஆனந்த பவன் ஹோட்டலில் வாங்கிய நூடுல்ஸில் கரப்பான் பூச்சி

அடையாறு ஆனந்த பவன் ஹோட்டலில் வாங்கிய நூடுல்ஸில் கரப்பான் பூச்சி

சென்னை அடுத்த திருவொற்றியூர் அடையாறு ஆனந்த பவன் ஓட்டலில் செஸ்வான் நூடுல்ஸ் பிளேட்டில் கரப்பான் பூச்சி இருந்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.திருவொற்றியூர் காலடிப்பேட்டை பகுதியை சேர்ந்த 27 வயதுடையவர் யுவராஜ். இவர் தண்டையார்பேட்டை அண்ணாமலை டிரைவிங் ஸ்கூலில் பணிபுரிந்து வருகிறார். திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் அருகே உள்ள அடையார் ஆனந்த பவன் ஓட்டலில் செஸ்வான் நூடுல்ஸ் ஆர்டர் செய்துள்ளார். இதனையடுத்து வெகுநேரமாக காத்திருந்த பின்பு ஊழியரிடம் கேட்டு செஸ்வான் நூடுல்ஸை யுவராஜிடம் கொடுத்து விட்டு சென்றுள்ளார்.செஸ்வான் நூடுல்ஸை பாதி சாப்பிட்ட யுவராஜ் தட்டில் கரப்பான் பூச்சி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார் . இது குறித்து ஊழியரிடம் தெரிவித்த போது உடனடியாக மேஜையில் இருந்த பிளேட்டை எடுத்து கொண்டு சமையல் அறையில் எடுத்து சென்றனர். இதுகுறித்து கிளை மேலாளரிடம் கேட்ட யுவராஜ் பூச்சி தான் இது பரந்து வந்து விட்டதாக தெரிவித்து மன்னித்து விடுங்கள் என்றும் இது போல தவறு நடக்காது என்று கூறியுள்ளார். இதனையடுத்து யுவராஜ் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இச்சம்பவம் குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிடம் தெரிவிப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )