அணைக்கட்டில் நடந்த விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் பெண் காவல் ஆய்வாளர் மீது பரபரப்பு புகார்

அணைக்கட்டில் நடந்த விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் பெண் காவல் ஆய்வாளர் மீது பரபரப்பு புகார்
பொய் வழக்கு போட்டதாக விவசாயிகள் குற்றச்சாட்டு !
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தாசில்தார் வேண்டா தலைமை தாங்கினார். வேளாண்மை துறை உதவி இயக்குநர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:
அணைக்கட்டு உட்கோட்டத்திற்கு உட்பட்ட வேப்பங்குப்பம் பெண் காவல் ஆய்வாளர் புனிதா காவல் நிலையத்திற்கு அழைத்து விவசாயிகள் மீது பொய் வழக்கு தொடுத்தார்.
இதனால் விவசாயிகள் அதிகமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வேப்பங்குப்பம் காவல் ஆய்வாளர் புனிதா மற்றும் உளவுப்பிரிவு மணிவண்ணன் ஆகியோர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவர்களை உடனடியாக பணியிட மாற்றம் செய்ய வேண்டும். கடந்த மாதம் அவர் மீது ஏற்கனவே விவசாயிகள் புகார் தெரிவித்தனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
இந்த மாதமும் மீண்டும் கோரிக்கை வைத்துள்ளனர். அவர் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
நெற்பயிர்களுக்கு காப்பீடு வழங்க வேண்டும். ஊசூர் பகுதியில் மின் நிலையம் அமைக்க வேண்டும். தடையில்லா மின்சாரம் வழங்கிட வேண்டும்.
நெல் அறுவடை செய்யும் இயந்திரத்தை மானிய விலையில் வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை கணக்கெடுத்து மின் மீட்டர் அமைக்க கூடாது. இவ்வாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்தினர்.
இந்த விவாதத்தின் போது காவல் ஆய்வாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி விவசாயிகள் தாசில்தாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் கூட்டத்தில் மிகவும் சலசலப்பு நிலவியது. இது குறித்து பதில் அளித்த தாசில்தார் வேண்டா, விவசாயிகள் விடுத்துள்ள புதிய கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்த கூட்டத்தில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.