BREAKING NEWS

காட்பாடி அடுத்த வண்டறந்தாங்கலில் ஒற்றை யானை அட்டகாசம்: பொதுமக்கள் பீதி!

காட்பாடி அடுத்த வண்டறந்தாங்கலில் ஒற்றை யானை அட்டகாசம்: பொதுமக்கள் பீதி!

காட்பாடி அடுத்த வண்டறந்தாங்கல் பகுதியில் ஒற்றை யானை கடந்த ஒன்றரை மாதங்களுக்கு மேலாக சுற்றி திரிந்து வருகிறது.

இந்த யானை பொதுமக்களை அச்சுறுத்தி வருவதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வர முடியாமல் பீதி அடைந்து காணப்படுகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் வண்டறந்தாங்கல் முதல் தொண்டான்துளசி வரை இந்த ஒற்றை யானை அலைந்து திரிகிறது .

இதனால் விவசாயம் செய்துள்ள விவசாயிகளின் பயிர்கள் சேதம் அடைந்து ஒன்றுக்கும் உதவாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இதனால் விவசாயிகள் சொல்லொனா துயரத்துக்கு ஆளாகியுள்ளனர். இதுகுறித்து வனத்துறையினரிடம் தகவல் தெரிவித்தும் அவர்களும் கண்டும் காணாமல் இருந்து வருகின்றனர்.

இந்த ஒற்றை யானையை விரட்டவும் முடியாமல் என்ன செய்வது என்றும் தெரியாமல் வனத்துறையினர் குழம்பிய நிலையில் காணப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் பொதுமக்களோ தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள தினம் தினம் இரவு நேரங்களில் தூக்கத்தை தொலைத்து விட்டு உயிருக்கு அஞ்சி நடுங்கி பயந்த நிலையில் வாழ்ந்து வருகின்றனர் என்பது வெட்கக்கேடான விஷயமாகும்.

ஆதலால் பொதுமக்கள் நலன் கருதியும் விவசாயிகள் நலன் கருதியும் இந்த ஒற்றை யானையை அருகில் உள்ள ஆந்திர பிரதேச எல்லையில் விரட்டியடித்து பொது மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வனத்துறை முன்வர வேண்டும் என்பது ஒட்டுமொத்த பொதுமக்களின் எதிர்பார்ப்பாக மாறி உள்ளது.

வனத்துறை பொதுமக்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமா? அல்லது கைகட்டி வழக்கம்போல் வேடிக்கை பார்க்குமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

CATEGORIES
TAGS