காட்பாடியில் தூய்மை பணியாளர்களுக்கு சுகாதார அலுவலர் அறிவுரை வழங்கல்!

வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட 1வது மண்டலம், காட்பாடி பகுதியில் சுகாதார ஆய்வாளர் டாக்டர் கே. சிவக்குமார் தூய்மைப் பணியாளர்களின் வருகைப் பதிவேடுகளை ஆய்வு செய்தார். அப்போது வீடு வீடாகச் செல்லும் தூய்மைப் பணியாளர்களின் பணி மற்றும் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தனித்தனியாக தரம் பிரித்து வாங்கும் பணியை சரியாக செய்கின்றார்களா? என ஆய்வு செய்தார். குறிப்பாக பொதுமக்களிடம் இருந்து புகார் வராத வகையில் நீங்கள் பணியாற்ற வேண்டும் என்றும் அப்போது அவர்களுக்கு டாக்டர் சிவக்குமார் தகுந்த அறிவுரைகளை வழங்கினார்.
CATEGORIES வேலூர்
