அலுவலக உதவியாளரை 7 நாட்களும் வேலைக்கு வருமாறு கூறி அவரை டார்ச்சர் செய்யும் கணியம்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர்!

வேலூர் மாவட்டம், வேலூர் வட்டம், கணியம்பாடி வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றுபவர் ரமேஷ்குமார். இவர் என்றைக்கு கணியம்பாடி வட்டார வளர்ச்சி அலுவலராக பணிக்கு வந்தாரோ அன்று முதல் இன்று வரை கணியம்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரியும் யாரிடமும் சரியாக பேசுவது கிடையாது. இவருக்கும் இங்கு பணியாற்றும் அனைத்து பணியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் இடையில் ஒரு பணிப்போர் அமைதி கரமாக நடந்து வருகிறது. இந்த பணிப் போருக்கு காரணமே பிடிஓ ரமேஷ் குமார் தான் என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த வட்டார வளர்ச்சி அலுவலராக உள்ள ரமேஷ் குமார் கணியம்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரியும் ஒரு நபரை தினசரி டார்ச்சர் செய்வது, அவரை பணி செய்ய விடாமல் தடுப்பது, அவரை மன உளைச்சலுக்கு உள்ளாக்குவது என்று விதவிதமாக அவரை கொடுமைப்படுத்தி ரசித்து வருகிறார் வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ் குமார் என்று சொன்னால் அது மிகையாகாது. அத்துடன் ஒரு படி மேலே சென்று பிடிஓ அந்த அலுவலக உதவியாளரை நீ ஒருநாளும் ஓய்வு எடுக்கக் கூடாது, வார விடுமுறை எடுக்கக் கூடாது 7 நாட்களும் தினசரி அலுவலகத்திற்கு வந்து செல்ல வேண்டும் என்று அவருக்கு வாய்மொழி உத்தரவு கொடுத்து அவரை டார்ச்சர் டார்ச்சர் செய்து வருகிறார். ஒருமையில் திட்டுகிறார்.

இப்படி வார விடுமுறை எடுத்துக் கொண்டு, ஓய்வு எடுத்துக் கொண்டால் இங்கு யார் வேலை பார்ப்பது என்று கேள்வி கேட்கிறார். பணிக்கு வராமல் நீ என்ன வீட்டில் செய்கிறாய் என்று ஒருமையில் பேசி அவரை கடும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கி வருகிறார் வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ் குமார். இவர் குறித்து மேல் அதிகாரிகளுக்கு தகவல்கள் தெரிவித்த பிறகும் மேலதிகாரிகள் வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ் குமார் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்த வண்ணம் உள்ளனர். ஆதலால் இந்த புகாரின் மீது உரிய விசாரணை நடத்தி வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ் குமார் மீது துறை ரீதியான சட்ட நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என்று கணியம்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர் பிடிஓ மீது என்ன நடவடிக்கை எடுக்கிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்.
செய்தி ஆசிரியர் ச.வாசுதேவன்
