காட்பாடி சன்பீம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு போட்டி-பரிசளிப்பு!

வேலூர் மாவட்டம், காட்பாடி மெட்டுக்குளத்தில் உள்ள சன்பீம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில விளையாட்டு போட்டிகள் நடந்தது. இந்த விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் விழா பள்ளி தாளாளர் ஹரி கோபாலன் தலைமையில் நடந்தது. இதில் பள்ளி முதல்வர் தங்கப்பிரகாஷ் மற்றும் திரளான மாணவ, மாணவிகளும், பெற்றோர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நீதிமன்றத்தில் நிலம் தொடர்பான வழக்குகள் நீதிமன்ற சிறப்பு நீதிபதி யுவராஜ் கலந்துகொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கோப்பைகள் மற்றும் சான்றுகளை வழங்கி பாராட்டினார்.

இதைத் தொடர்ந்து விழாவில் பேசிய நீதிபதி யுவராஜ் மாணவ, மாணவிகளுக்கு கூறிய அறிவுரையில் மாணவர்கள் படிப்பால் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர் .இதனை போக்கி மனநலனையும், உடல் நலனையும் காக்க பெற்றோர்கள் மாணவர்களை ஏதாவது ஒரு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கச் செய்தல் அவசியம் ஆகும் .அது மாணவர்களுக்கு வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும் என்று பேசினார்.

இந்த பரிசளிப்பு விழாவில் பள்ளியின் துணைத் தலைவர் டாக்டர் ஜார்ஜ் அரவிந்த், பள்ளி துணை செயலாளர் முதல்வர் ஜெயராஜ், துணை முதல்வர்கள் வாசுதேவன், அருள், ஒருங்கிணைப்பாளர்கள் ஆயிஷா, ரம்யா மற்றும் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். மாணவி இனியா அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சி நிறைவில் மாணவர் முகமது ஷெரீப் நன்றி கூறினார்.
