BREAKING NEWS

கிராம நிர்வாக அலுவலர்கள் 10 பேர் மட்டுமே கலந்து கொண்ட பணியிட மாற்றத்திற்கான நேர்காணல்!

கிராம நிர்வாக அலுவலர்கள் 10 பேர் மட்டுமே கலந்து கொண்ட பணியிட மாற்றத்திற்கான நேர்காணல்!

வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிட மாற்றம் வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு வேலூர் கோட்டாட்சியர் செந்தில்குமார் நேர்காணல் நடத்தினார். இந்த நேர்காணல் காட்பாடி வட்டத்தில் ஜமாபந்தி முடிந்தவுடன் நடந்தது. ஆனால் இந்த நேர்காணலில் கிராம நிர்வாக அலுவலர்கள் பெரும்பாலும் யாரும் கலந்து கொள்ளவில்லை. கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தைச் சார்ந்த நிர்வாகிகள் அன்பரசன், விநாயகம், இளங்கோவன், சரவணன், வெங்கடேசன் உள்ளிட்ட 10 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.

சங்கத்தின் நிர்வாகிகள் தங்களுக்கு வேண்டிய இடங்களை தேர்வு செய்து கொள்கின்றனர். குறிப்பாக அவர்கள் தேர்வு செய்த இடங்கள் போக மீதமுள்ள இடங்களில் மற்றவர்கள் தேர்வு செய்து கொள்ள வேண்டிய அவலநிலை தொடர்ந்து நிலவுகிறது. இப்படி கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் நிர்வாகிகளுக்கு இதற்கு முன்பு காட்பாடி வட்டாட்சியராக இருந்த

 

ஜெகதீஸ்வரன்(எ)ஜெகன் கேட்பதையெல்லாம் செய்து கொடுத்து அவர்களை தவறான பாதையில் அழைத்து சென்றார். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ஜெகதீஸ்வரன் இருக்கும் போது கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்திற்கு தாலுகா அலுவலகத்தில் தனி அறை ஒதுக்கப்பட்டு சங்கம் கூட்டம் மற்றும் ஆலோசனைகள் கூட்டம் அனைத்தும் நடக்க முன்னாள் தாசில்தார் ஜெகதீஸ்வரன் சங்கத்திற்கு தேவையான அனைத்தையும் ஏற்பாடுகள் செய்து கொடுத்துள்ளார்.

அத்துடன் இதேநிலை தற்போதும் தொடர ஆரம்பித்துள்ளது. ஜெகன் பணியிடமாற்றம் செய்யப்பட்ட பிறகும் காட்பாடி வட்டாட்சியர் மகேஸ்வரி பணியிலும் குறுக்கீடு செய்த வண்ணம் உள்ளார் என்ற தகவல் காட்டுத்தீ போல வருவாய் துறையில் பரவி வருகிறது. ஜெகன் வெளியில் சென்ற பிறகும் காட்பாடி வட்டத்தில் தனிக்கவனம் செலுத்தி ஆணையிட்டு வருகிறார் என்றே சொல்லலாம். கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிடமாற்றத்திலும் இன்றுவரை அதேநிலை தொடர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தில் உள்ளவர்களுக்கு சாதகமாகவே செயல்படுகின்றன. ஆண்டுதோறும் சங்க நிர்வாகிகள் தொடர்ந்து மூக்கை நுழைத்து கொள்வது வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக தாராபடவேடு, பழைய காட்பாடி, கழிஞ்சூர், காங்கேயநல்லூர், சேனூர், வஞ்சூர், கரசமங்கலம், வண்டறந்தாங்கல், பிரம்மபுரம், சேவூர் ஆகிய கிராமங்கள் அடங்கும். இந்த இடங்களில் மீண்டும் மீண்டும் சுழற்சி முறையில் 3 முறை, 4 முறை என்று இங்கு பணியாற்றியவர்களே மீண்டும் அதே இடங்களை குறிவைத்து மற்ற யாருக்கும் இந்த இடங்களில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்துவிடக் கூடாது என்பதில் குறியாக இருந்து தட்டிப்பறிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். காட்பாடி வட்டத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் கிராம நிர்வாக அலுவலர்களை கலந்து பணியமர்த்த ஈரோட்டில் இருந்து வேலூர் கோட்டாட்சியராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ள நபர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று சக கிராம நிர்வாக அலுவலர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். சங்கத்தை தூக்கி குப்பையில் வீசிவிட்டு முறையாக பணியிடமாற்றம் வழங்க கோட்டாட்சியர் முன்வர வேண்டும். மேலும் மாவட்ட ஆட்சியர் பி.எஸ்.லீலா அலெக்ஸ்  கவணம் செலுத்தி காட்பாடி தாலுகா அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிடம் மாற்றத்தில் நடக்கும் குளறுபடிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த ஆண்டு முறைகேடு ஏதும் நடைபெறாமல் தகுதி வாய்ந்த விஏஓக்களை பணியமர்த்த வேண்டூம் கோட்டாட்சியர். சங்கத்தின் கொட்டத்தை அடக்க வேண்டும் கோட்டாட்சியர். குறிப்பாக மேலே குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் புதிய நபர்களை நியமனம் செய்யப்பட வேண்டும் என்று கிராம நிர்வாக அலுவலர்கள் ஆவலுடன் எதிர் பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். கோட்டாட்சியர் நடவடிக்கையை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

செய்தி ஆசிரியர் ச.வாசுதேவன்

CATEGORIES
TAGS