BREAKING NEWS

புறம்போக்கு நிலத்தை முறைகேடாக வழங்கிய அணைக்கட்டு முன்னாள் வட்டாட்சியர் வேண்டா மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை!

புறம்போக்கு நிலத்தை முறைகேடாக வழங்கிய அணைக்கட்டு முன்னாள் வட்டாட்சியர் வேண்டா மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை!

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், வேப்பங்குப்பம் பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் பட்டா வழங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கிடைத்த தகவலின்படி, சுமார் 1700 சதுர அடி பரப்பளவு கொண்ட அரசு புறம்போக்கு நிலம், சுமார் ரூ.20 லட்சம் சந்தை மதிப்பு கொண்டதாக கூறப்படும் நிலையில், தகுதி விதிமுறைகளுக்கு உட்படாத நபருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், காவல்துறை குடியிருப்பு அமைப்பதற்காக ஒதுக்கப்பட்டதாக பதிவுகளில் குறிப்பிடப்பட்ட நிலம், தனிநபர் பெயரில் பட்டா வழங்கப்பட்டதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாக அப்போதைய

அணைக்கட்டு வட்டாட்சியர் வேண்டா மற்றும் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரின் நடவடிக்கைகள் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு மேலதிகாரிகள் விசாரணை நடைபெற்று வருவதாகவும் நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாடு அரசு நில ஒதுக்கீடு மற்றும் வீட்டுமனை பட்டா வழங்கும் விதிமுறைகளின்படி, அரசு நிலங்களை ஒதுக்கீடு செய்யும் போது தகுதி, வருமானம், சொத்து நிலை மற்றும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும். அவை மீறப்பட்டிருப்பது விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பயனாளிகள் மீது ஊழல் தடுப்புச் சட்டம், அரசு பணியாளர் ஒழுங்கு நடவடிக்கை விதிகள் மற்றும் பிற தொடர்புடைய சட்டங்களின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படலாம் என சட்ட வல்லுநர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஒரு பட்டா வழங்கல் சம்பவம் மட்டுமல்லாமல், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பணியாற்றிய காலகட்டத்தில் வழங்கப்பட்ட பிற பட்டாக்கள், வருவாய் பதிவேடுகள், நில அளவை ஆவணங்கள் மற்றும் அரசு நில ஒதுக்கீட்டு கோப்புகள் அனைத்தும் முழுமையாக ஆய்வு செய்யப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். அரசின் நலத்திட்டங்கள் உண்மையான பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதி செய்வதுடன், அரசு சொத்துக்கள் தொடர்பாக ஏதேனும் முறைகேடுகள் நடைபெற்றிருப்பது நிரூபிக்கப்பட்டால், அதில் தொடர்புடைய அனைத்து தரப்பினரிடமும் பாரபட்சமின்றி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது.
மேலும், இந்த விவகாரத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புடைய அரசு ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் அனுமதி வழங்கும் நிர்வாக அமைப்புகளின் பங்கு குறித்தும் முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விசாரணையில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டோர் மீது சட்டத்திற்குட்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள், பணி தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, எதிர்காலத்தில் இதுபோன்ற முறைகேடுகள் எங்கும் நடைபெறாத வகையில் தமிழ்நாடு அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் சட்ட வல்லுநர்கள் வலியுறுத்தி வருகின்றனர். எம் எல் ஏ சொன்னதை வேதவாக்காக கருதி தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த வேண்டா மீது நடவடிக்கை எடுத்து அவரை நிரந்தரமாக பணிநீக்கம் செய்ய வேலூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது மற்ற அரசு அலுவலர்களுக்கு ஒரு முன் உதாரணமாக இருக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மாவட்ட நிர்வாகம் தவறு செய்த அரசு அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்குமா? அல்லது கண்டும் காணாமல் விட்டு விடுமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன். 

செய்தி ஆசிரியர் சா.வாசுதேவன்

Share this…

CATEGORIES
TAGS