கணியம்பாடியில் இளம் விதவையை மிரட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட போலீஸ் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை!

வேலூர் மாவட்டம், வேலூர் வட்டம், கணியம்பாடி பாரதி நகரைச் சேர்ந்தவர் சங்கர். இவர் காவல்துறையில் காவலராக பணியாற்றி வருகிறார். இவர் பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் பணியாற்றி விட்டு தற்போது கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கணியம்பாடி காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இவர் காவல்துறையினருக்கு வழங்கப்பட்டுள்ள அரசு மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு இவர் கணியம்பாடி எனப்படும் வேலூர் தாலுகா காவல் சரக எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வலம் வந்து கொண்டுள்ளார். இவர் இந்த வழியாகச் செல்லும் லாரிகளை நிறுத்தி லாரி ஓட்டுநர்களிடம் மாமூல் வசூலிப்பதை அன்றாட நிகழ்வாக வைத்துள்ளார். அத்துடன் காவல்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தும் இடங்கள், அவர்கள் எங்கு வருகிறார்கள், எப்போது வருகிறார்கள் என சம்பந்தப்பட்ட நபர்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்து விட்டு அவர்களிடம் ஒரு கணிசமான தொகையை வழக்கமாக பெற்றுக்கொள்வதை இன்று வரை செய்து வருகிறார். என்று சொன்னால் அது மிகையாகாது. இந்நிலையில் அவர் வேலூர் தாலுகா காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள லாரிகளில் இருந்து உதிரி பாகங்களை திருடி அதாவது பேட்டரி, செல்ஃப் மோட்டார், லாரியின் இதர உதிரி பாகங்கள் மற்றும் டிராக்டர்களில் இருக்கும் உதிரி பாகங்கள், இருசக்கர வாகனங்களில் இருக்கும் பேட்டரிகள் உள்ளிட்டவற்றை இந்த போலீஸ்காரர் சங்கர் திருடி வெளியில் உள்ள இருசக்கர வாகன மெக்கானிக்கல்களிடம் விற்பனை செய்து பணத்தை தனது பாக்கெட்டில் போட்டுக் கொண்டு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் இவர் பொதுமக்களை மிரட்டி காரியம் சாதித்து வருவதாக ஒரு அதிர்ச்சி தகவல் தெரிவிக்கிறது. இதே போன்று தான் பள்ளிகொண்டாவில் இவர் நடந்து கொண்ட விதம் சரியில்லை என்றும் இவர் மீது பாலியல் தொடர்பாக புகார்கள் எழுந்தது எடுத்தோம் இவர் அதிரடியாக பள்ளிகொண்டாவிலிருந்து கணியம்பாடிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் கணியம்பாடிக்கு வந்தும் அவர் திருந்தியதாக தெரியவில்லை.

குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் கணியம்பாடி அடுத்த நெல்வாய் பகுதியில் துர்கை அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த எழிலரசி(32) என்ற இளம் விதவைப் பெண்ணை மிரட்டி ‘ஏன் நீ தனியாக தானே இருக்கிறாய், எனக்கு சுகத்தை கொடு நாம் உல்லாசமாக இருக்கலாம்’ என்று கூறி அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார் சங்கர். இதைய டுத்து அந்தப் பெண் வேலூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்க விடாமல் அமைதி காத்து வரப்படுவதாக கூறப்படுகிறது. அத்துடன் சங்கரின் அட்டூழியங்கள் நின்ற பாடில்லை. அதையடுத்து கணியம்பாடி பேருந்து நிறுத்தத்தில் உள்ள மளிகை கடைகள், தள்ளுவண்டி கடைகள், கோழி இறைச்சி கடைகள் மற்றும் இதர வியாபாரிகளை மிரட்டி தினமும் ரூபாய் 100 முதல் ரூபாய் 500 வரை கடைகளுக்கு ஏற்றார் போல் மாமூல் வசூலித்து வருகிறார் இந்த ஜெகஜால கில்லாடி சங்கர் என்று சொன்னால் அது மிகையாகாது. அத்துடன் பொதுமக்களை மிரட்டி மண், மணல் உள்ளிட்ட கனிம வளங்களை சுரண்டிச் செல்லும் லாரி உரிமையாளர்களை நிறுத்தியும் அவர்களிடம் ரூபாய் 10,000 முதல் ரூபாய் 30,000 வரை ஒரு லாரிக்கு வசூல் செய்கிறார் இந்த கடமை வீரன் கந்தசாமி. அதேபோன்று காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய லாரிகளிலிருந்து உதிரி பாகங்களை திருடி அவற்றை வெளியில் விற்று இவர் கொள்ளை லாபம் பார்த்து வருகிறார். கணியம்பாடி அடுத்த வேப்பம்பட்டு அருகே உள்ள பகுதியில் சிசிடிவியில் பதிவான காட்சிகளை பார்த்தால் இதன் உண்மை நிலவரம் தெரியவரும். அத்துடன் குளிர்பான கடைகளில் உள்ள குடிநீர் பாட்டில்கள், குடிநீர் பாட்டில்களில் அடைக்கப்பட்ட பழ ஜூஸ் வகைகள் போன்றவற்றை எடுத்துக் கொண்டு பணம் தராமல் ஏமாற்றுகிறார் என்று கண்ணீர் மல்க வியாபாரிகள் தரப்பில் புகார் கூறப்படுகிறது.
அதே போன்று சுற்று பகுதியில் உள்ள ஏரி பகுதிகளிலிருந்து சூளைக்கு மண் எடுத்துச் செல்பவர்களை மிரட்டி பணம் பறிக்கிறார். அத்துடன் இவர் ஒரு ஹெல்மெட்டை மாட்டிக் கொண்டு அதை திறந்து தனது முகத்தை காட்டாமலேயே இவர் நகர்வலம் வருகிறார். அது ஏனென்றால் யாராவது இவரை புகைப்படம் எடுத்து விடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக இந்த ஹெல்மெட்டை அணிந்து கொண்டு இவர் காவல்துறைக்கு சொந்தமான பிரிகேடியர் மோட்டார் சைக்கிளில் வலம் வந்தபடி உள்ளார் என்கின்றனர் இந்த பகுதி வாழ் பொதுமக்கள். இவரை கண்டாலே பலர் அஞ்சி நடுங்கி பயந்து ஓடி விடுகின்றனர் என்றே சொல்லலாம். இவ்வாறு பணம் பிடுங்கும் இயந்திரமாகவே இவர் மாறிவிட்டார். இவர் மற்றவர்கள் பற்றி பெட்டிஷன் எழுதுவதற்கு ஒரு நபரை தனக்கு அடிமையாக நியமித்து வைத்துள்ளார். அதாவது கணியம்பாடி பாரதி நகரைச் சேர்ந்த தபால் ஏழுமலை(40) என்பவரை நியமனம் செய்து வைத்துக் கொண்டு காவல்துறையில் தன்னுடன் பணியாற்றுபவர்களுக்கும் வெள்ளி நபர்கள் யாராக இருந்தாலும் இவரே பெட்டிஷன் எழுதி வைத்து அதை போட்டுவிட்டு இவர் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக லாரி உரிமையாளர்களை மிரட்டி அவர்கள் மீது பெட்டிஷன் போட்டு அதை விசாரிப்பது போல் ஒரு பெருந்தொகையை வசூல் செய்து கொள்கிறார் இந்த ஜெகஜால கில்லாடி சங்கர். இவர் காவல்துறையில் ஒரு களங்கம். குறிப்பாக காவல்துறையில் ஒரு கருப்பு ஆடு என்று இவரை அழைக்கலாம். பள்ளிகொண்டாவில் இவரை விரட்டாத குறையாக விரட்டியடித்தனர். இவருக்கு ஒரு எச்சரிக்கை கொடுத்து அனுப்பிய நிலையிலும் இவர் திருந்தாமல் நாய் வால் போன்று சுருட்டிக்கொண்டு மீண்டும் தனது பணியை செய்து வருகிறார் என்று சொன்னால் அதுதான் நிதர்சன உண்மை. இதுவரை இவர் 20 லாரி உரிமையாளர்கள் மீது இந்த தபால் ஏழுமலையை வைத்துக்கொண்டு பெட்டிஷன் அனுப்பி மிரட்டி பணம் பறித்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர் பொதுமக்கள் மீதும் பெட்டிஷன் அனுப்புவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அதை வைத்து இவர் பணம் பறித்து வருகிறார். அதோடு நின்றுவிடவில்லை ஆட்டு வியாபாரிகள், மாட்டு வியாபாரிகள் மற்றும் பல்வேறு தொழில் செய்யும் நபர்களை மிரட்டி இவர் நான் வழக்கு பதிவு செய்து உன்னை கைது செய்து விடுவேன் என்று பல்வேறு பயமுறுத்தல்களை கூறி அவர்களிடம் கணிசமான தொகையை பறிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இதை காவல் நிலையத்தில் உள்ள காவல் ஆய்வாளர் முதல் காவல் உதவி ஆய்வாளர்கள் வரை யாரும் கண்டு கொள்வதே இல்லை. ஏனென்றால் இதை யார் தட்டி கேட்கிறார்களோ அவர்கள் மீது இவர் பெட்டிஷன் போடுவார் என்ற பயத்தால் யாரும் இவர் செய்யும் அட்டூழியங்களை கண்டும் காணாமல் இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு கணியம்பாடி காவல் நிலையத்தில் ஒரு அசாதாரண சூழ்நிலை சங்கரால் நிலவுவது குறிப்பிடத்தக்கது. இதை தனிப்பிரிவு போலீசாரும், தனிப்பிரிவு சிஐடி போலீஸாரும் தங்களது அலுவலகங்களுக்கு தெரிவிக்காமல் அமைதி காத்து வருகின்றனர். ஏனென்றால் அவர்களுக்கும் இதே பயம்தான் போல இருக்கிறது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும வேலூர் சரக டிஐஜி ஆகியோர் இவர் மீது துறை ரீதியான உரிய நடவடிக்கையை எடுத்து இவரை உரிய விசாரணைக்கு உட்படுத்தி இவர் மீது சட்டரீதியான நடவடிக்கையை விரைந்து எடுத்து சட்டம் ஒழுங்கை கணியம்பாடி பகுதியில் நிலைநாட்ட வேண்டும் என்று பொதுமக்களும் இவரால் பாதிக்கப்பட்ட பல்வேறு தரப்பினரும் எதிர்பார்த்து ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர். குறிப்பாக லாரி உரிமையாளர்களின் கழுத்தில் துண்டை போட்டு இறுக்கி ஒரு பெருந்தொகை வசூல் செய்வதை இவர் வழக்கமாகக் கொண்டுள்ளார் என்பது வருத்தத்துக்குரிய ஒரு விஷயமாக உள்ளது. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் நீங்கள் பணம் தரவில்லை என்றால் நான் லாரியை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் கொண்டு சென்று நிறுத்தி விடுவேன் என்று மிரட்டி வருகிறார் என்பது உண்மையிலும் உண்மை நிதர்சன உண்மையாகும். இவ்வாறு பொதுமக்களை மாறி மாறி மிரட்டி மிரட்டி வசூல் செய்வதை இவர் என்றைக்கு நிறுத்துகிறார் என்பதுதான் இன்றைக்கு விடை தெரியாத ஒரு கேள்வியாக கணியம்பாடியில் உலா வந்து கொண்டுள்ளது.
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இந்த கருப்பு ஆட்டுக்கு மணி கட்டுவாரா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இவர் என்றைக்கு கணியம்பாடி காவல் நிலையத்தில் இருந்து வெளியேற்றப்படுகிறாரோ அன்றைக்கு தான் கணியம்பாடி காவல் நிலையத்திற்கு ஒரு சுதந்திரம் பிறந்தது என்றே சொல்லலாம் என்கின்றனர் இந்த பகுதியில் வாழும் பொதுமக்கள். ஆக மொத்தத்தில் இவர் கணியம்பாடியில் இருந்து தூக்கி எறியப்படும் நாள் தான் தங்களுக்கு தீபாவளி என்று குறிப்பிடுகின்றனர் பொதுமக்கள். பொதுமக்கள் தீபாவளியை கொண்டாட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுப்பாரா? என்று ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர் பொதுமக்கள்.
“ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்”
செய்தி ஆசிரியர் ச.வாசுதேவன்
