வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சியில் குடிநீர் திட்டப் பணியாளர் மீது புகார்!

ரூ.25,000 பெற்றும் குடிநீர் இணைப்பு வழங்கவில்லை எனக் குற்றச்சாட்டு – தமிழக அரசு நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி தாலுகா, உதயேந்திரம் பேரூராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி காவலராகப் பணிபுரியும் ரவிச்சந்திரன் மீது, பணிக்கு முறையாகச் செல்வதில்லை, வருகைப்பதிவேட்டின்படி வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே பணிபுரிவதாகவும், அம்பலூர் குடிநீர்த் தேக்கத் தொட்டியில் இரவுக் காவல் பணியை மேற்கொள்ளாமல் பேரூராட்சி அலுவலகத்திலேயே பிற பணிகளைச் செய்து வருவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வரித்தண்டலர் பணிகளை மேற்கொள்வதில் முறையான கணக்குகள் பராமரிக்கப்படுவதில்லை என்றும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
குடிநீர் இணைப்புக்கு பணம் பெற்று வழங்கவில்லை எனப் புகார்!
குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதற்காக ரூ.25,000 பெற்றும் இணைப்பு வழங்காமல், மாதந்தோறும் போலி பில்கள் வழங்கி வசூல் செய்வதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து 1-வது வார்டு கவுன்சிலர் பேரூராட்சி மாதாந்திரக் கூட்டத்தில் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. ஏற்கெனவே ரவிச்சந்திரனின் நியமனம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டதைத் தொடர்ந்து, பேரூராட்சிகளின் இயக்குநர் நேரில் ஆஜராகி மன்னிப்புக் கோரியதாகவும், ரவிச்சந்திரன் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும் புகார்தாரர் தெரிவித்துள்ளார்.

அவரைப் பணியமர்த்திய செயல் அலுவலர்கள் விஜயா மற்றும் ஆனந்தன் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், ராஜலட்சுமி நான்கு மாதங்களுக்கு முன்பு வேறு வழக்கைக் காரணம் காட்டி அவரை மீண்டும் பணியமர்த்தியதாகவும், இது சட்டவிரோதம் என்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இப்புகார்கள் குறித்து உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது தமிழக அரசு துரிதமாக உரிய சட்ட ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழக முழுவதும் புரோக்கர்களை வைத்து நூதன முறையில் லஞ்சம் பெற்று ஆன்லைன் ஆன்லைன் ஆன்லைன் என பொய் குற்றச்சாட்டுகளை பரப்பி நம்ப வைக்கும் அளவில் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதும், முழு பூசணிக்காய் சோற்றில் வைத்து மறைப்பது போல் மறைத்து அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தி சட்டவிரோதமாக செயல்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து துரிதமாக மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அனைத்துறை பணியாளர்கள் சங்கம் சார்பில் சங்கத்தலைவர் C ராஜவேலு அவர்கள் தமிழக அரசு இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
