BREAKING NEWS

ஒன்றே குலம்! ஒருவனே தேவன் , மனுஜோதி ஆசிரமம் சார்பில் ஆன்மீக விழிப்புணர்வு கூட்டம் லியோ பால் லஹரி தலைமையில் நடைபெற்றது

ஒன்றே குலம்! ஒருவனே தேவன் ,  மனுஜோதி ஆசிரமம் சார்பில் ஆன்மீக விழிப்புணர்வு கூட்டம் லியோ பால் லஹரி தலைமையில் நடைபெற்றது

1963-ஆம் ஆண்டு ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்களால் நிறுவப்பட்ட மனுஜோதி ஆசிரமத்தின் சார்பில் இக்கூட்டம் நடைபெற்றது.

நாள்: 13-10-2026.. திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகில் அமைந்துள்ளது மனுஜோதி ஆசிரமம். பகவான் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்கள், 1963-ம் வருடம் இந்த ஆசிரமத்தை ஸ்தாபித்து, ஒன்றே குலம்! ஒருவனே தேவன்! என்ற கொள்கையை உலகமெங்கிலும் பறைசாற்றி வந்தார். இந்த கொள்கையை நம்பும் பக்தர்கள் சாதி, மொழி, மதம், இனம், நிறம், தேசம் என்ற பாகுபாடின்றி மனுஜோதி ஆசிரமத்தில் ஒன்றுகூடுகின்றனர்.

இதன் கிளைகள் இந்தியாவின் பல மாநிலத்திலுள்ள பல்வேறு மாவட்டத்திலும், “ஸ்ரீ லஹரி கிருஷ்ணா ஸ்தோத்திர தியான நிலையம்” என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. இன்றைய தினம் வேலுரில், மனுஜோதி ஆசிரமத்தின் நிர்வாகி திரு. லியோ பால் லாறி அவர்கள் ஆன்மீக விழிப்புணர்வு கூட்டத்தை ஏற்பாடு செய்தார். லியோ பால் லாறி அவர்கள் பேசும்போது:- இன்றைய அவசரமான உலகில் இறைவனை மறவாமல் இருப்பதற்கு ஆன்மீக எழுச்சியினை ஏற்படுத்தி வருகிறோம். மனிதகுலம் இறைவழியிலே விருத்திபெற்று வாழ்ந்து, நல்வழியிலே நடந்து, இறைவனால் அருளப்பட்ட அநேக வேதங்கள் மற்றும் புராணங்களைப் படித்து உணர்ந்து, தன்னுடைய முழு மனதோடும் சிந்தையோடும் அதற்கேற்றபடி நடந்தால், அதுவே இறைவனைப் பற்றிக் கொண்டு ஜீவன் முக்தியை பெறுவதற்கான எளிய வழியாகும்.  இந்த உலகத்திலே அதிபயங்கரமான அழிவுகள் சம்பவிக்கப்போகிறது. அதிலிருந்து தப்பிப்பதற்கு ஒரே வழி, இந்த கடைசி காலத்திலே அவதரித்த ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவிடம் சரணடைய வேண்டும். ஒன்றே குலம்! ஒருவனே தேவன்! என்ற கொள்கையை நம்பும் பக்தர்களை எங்கள் மனுஜோதி ஆசிரமம் எப்பொழுதும் வரவேற்கிறது, என கூறினார்.

Share this…

CATEGORIES
TAGS