BREAKING NEWS

காட்பாடியில் ஸ்ரீ திருமலை திருப்பதி அன்னதான கூட அறக்கட்டளை சார்பில் புரட்டாசி மாத அன்னதான விழா தொடக்கம்

காட்பாடியில் ஸ்ரீ திருமலை திருப்பதி அன்னதான கூட அறக்கட்டளை சார்பில் புரட்டாசி மாத அன்னதான விழா தொடக்கம்

வேலூர் மாவட்டம், காட்பாடி ராஜீவ் காந்தி நகர், சித்தூர் மெயின் ரோடு, கல்புதூர் பகுதியில் உள்ள ஜெயபாலாஜி திருமண மண்டபத்தில் ஸ்ரீ திருமலை திருப்பதி அன்னதான கூட அறக்கட்டளை சார்பில் புரட்டாசி மாத 12 ஆம் ஆண்டு அன்னதானம் வழங்கும் விழா புரட்டாசி முதல் சனிக்கிழமையை ஒட்டி தொடங்கியது. இந்த அன்னதானம் வழங்கும் நிகழ்வு புரட்டாசி மாதம் முழுவதும் அதாவது 18. 9. 2026 முதல் 17 .10 .2026 வரை இடைவிடாது வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புரட்டாசி மாதம் அன்னதான விழாவை முன்னிட்டு வரும் 25. 9. 2026 வெள்ளிக்கிழமை மாலை 5 மணி முதல் 7 மணி வரை சிறப்பு ஸ்ரீ மகாலட்சுமி திருவிளக்கு பூஜை நடைபெற உள்ளது. இந்த திருவிளக்கு பூஜையை காட்பாடி ஸ்ரீ கிருஷ்ணா வேத கல்வி நிலையத்தின் ஸ்ரீமதி அமுதவல்லி கிருஷ்ண ஸ்ரீநிவாச தாஸர் நடத்துகிறார் .அதேபோன்று வரும் 4. 10. 2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9 மணிக்கு மேல் நண்பகல் 12:00 மணிக்குள் சீதாபிராட்டி சமேத ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி மற்றும் ஸ்ரீ பத்மாவதி தாயார் சமேத ஸ்ரீ வெங்கடேச பெருமாள் திருக்கல்யாண மகோற்சவ விழா நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு அன்று காலை 9 மணிக்கு திருமஞ்சனம் மற்றும் அலங்காரம் நடக்கிறது. இதை தொடர்ந்து காலை 10 மணி முதல் 11 மணிக்குள் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து முற்பகல் 11. 15 மணிக்கு அக்ஷதா ரோபணம் நடக்கிறது. இதைத்தொடர்ந்து பகல் 11:30 மணிக்கு மங்களாசாசனம் பகல் 12 மணிக்கு மேல் அன்ன பிரசாதம் வழங்குதல் நடைபெறுகிறது. திருக்கல்யாண வைபவத்தை ஸ்ரீ பாலாஜி ஸ்ரீநிவாச சுவாமிகள் மற்றும் குழுவினர் ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், என். ஆர். பேட்டை சேர்ந்த ஸ்ரீ பாலாஜி ஸ்ரீநிவாச ஸ்வாமிகள் மற்றும் குழுவினர்கள் நடத்தி வைக்கின்றனர் . இதை தொடர்ந்து காட்பாடி ஸ்ரீ கிருஷ்ணா வேத கல்வி நிலையத்தைச் சேர்ந்த ஸ்ரீமான் நந்தகுமார ஸ்ரீநிவாச தாசன் விழாவை ஒருங்கிணைப்பு செய்து நடத்துகிறார் .குடும்ப ஷேமத்திற்காக தம்பதிகளின் விசேஷ சங்கல்பம் நடைபெறுகிறது. பக்தர்கள் திரளாக வருகை தந்து சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சுமார் 150 நபர்களுக்கு வடை, பாயாசத்துடன் அன்னதானம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Share this…

CATEGORIES
TAGS