தனிநபர் கொடுத்த ஆட்சேபனை மனுவை காரணம் காட்டி காட்பாடி சார் பதிவாளர் நிலத்தை பதிவு செய்ய மறுப்பு: மாவட்ட பதிவாளர் கூறியும் இழுத்தடிக்கும் அவலம்!

வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், பெரியபுதூரைச் சேர்ந்தவர் கஜேந்திரன் (60). இவர் உடல் நலம் சரியில்லாமல ஓப்பன் ஹார்ட் சர்ஜரி செய்துள்ளார். இவருக்கு மீண்டும் உடல் நலம் சரியில்லாததால் தனது மனைவி தர்மவேணி (55) என்பவருக்கு தனது பங்கான 191/2 சென்ட் நிலத்தை காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய கஜேந்திரன் சென்றுள்ளார். அப்போது காட்பாடி சார் பதிவாளர் வெங்கடேசன் இந்த சொத்து கடந்த 1993இல் பாகப்பிரிவினை செய்துள்ளனர். இதில் கஜேந்திரன் தனது மனைவி தர்மவேணி பெயரில் 2026 இல் செட்டில்மெண்ட் செய்ய எழுதினார். அதாவது ஜனவரி மாதம் இந்த சொத்தானது தர்மவேணி பெயரில் டாக்குமெண்ட் நம்பர் 4286/2026ல் நெம்பர் ஆகியுள்ளது. அப்போது இருந்த காட்பாடி சார் பதிவாளர் பிரகாஷ் இதை பதிவு செய்து தர்ம வேணிக்கு கொடுத்துள்ளார். இதை கஜேந்திரனின் பங்காளியான சங்கரன் என்பவர் தனது அக்கா, தங்கை பெயரில் பாகப்பிரிவினை உள்ளது என்று ஆட்சேபம் தெரிவித்து மனு கொடுத்துள்ளார். அத்துடன் ஈசி எடுத்து பார்க்காமல் கடந்த 2008இல் இந்த பாகப்பிரிவினையை சங்கரன் தனிப்பட்ட முறையில் செய்துள்ளார். அதாவது கடந்த 1993இல் பாகப்பிரிவினை செய்து பதிவு செய்ததை பார்க்காமல் சங்கரன் தன்னிச்சையாக கடந்த 2008இல் தனது அக்கா, தங்கை பெயரில் இந்த பாகப்பிரிவினையை செய்துள்ளார். இதனை காட்பாடியில் உள்ள சார் பதிவாளர்கள் பார்க்காமல் தவறுதலாக பதிவு செய்துள்ளனர். அத்துடன் கஜேந்திரன் தனது மனைவி பெயரில் பதிவு செய்யச் சென்றபோது கடந்த 2025 இல் இந்த சொத்தை பதிவு செய்யக்கூடாது என்று ஆட்சேபனை மனு ஒன்றை தனிப்பட்ட முறையில் சங்கரன் கொடுத்துள்ளார். இது நீதிமன்றத்தில் இருந்தோ அல்லது தனிப்பட்ட வழக்கறிஞர் மூலமாகவோ தரப்படவில்லை .இது தனிநபர் சங்கரன் என்பவரால் கொடுக்கப்பட்டுள்ளது. இதை காரணம் காட்டி தற்போது உள்ள காட்பாடி சார் பதிவாளர் வெங்கடேசன நான் இந்த நிலத்தை பதிவு செய்ய முடியாது ஆட்சேபனை மனு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் எவ்வளவோ எடுத்துக் கூறியும் புரிந்து கொள்ள முடியாத சார் பதிவாளர் வெங்கடேசனிடம் பேசி புரிய வைக்க முடியாமல் தர்மவேணி மற்றும் அவரது கணவர் கஜேந்திரன் ஆகியோர் வேலூர் மாவட்ட பதிவாளரை நேரில் சந்தித்து காட்பாடி சார் பதிவாளர் செய்யும் இழுத்தடிப்பு மற்றும் அலைகழிப்பு நிகழ்ச்சிகளை விளக்கி கூறினர். இதையடுத்து அதை புரிந்து கொண்ட மாவட்ட பதிவாளர் நீங்கள் மீண்டும் காட்பாடிக்கு சென்று அங்கு நடந்ததை கூறுங்கள். அவர் பதிவு செய்து தருவார் என்று கூறி அனுப்பியுள்ளார். ஆனால் மீண்டும் காட்பாடிக்கு வந்து சார் பதிவாளரிடம் சொல்லுங்கள் என்று மாவட்ட பதிவாளர் சொன்னதை கஜேந்திரன் விளக்கி எடுத்துக் கூறியும் அதை ஏற்றுக் கொள்ளாமல் கடந்த 1993ல் நடந்த பத்திர பதிவை ரத்து செய்ய வேண்டும் என்று காட்பாடி சார் பதிவாளர் முன்னுக்குப் பின் முரணாக பேசி நேரத்தை வீணடிப்பதுடன் நிலத்தை பதிவு செய்ய முடியாமல் வீண் வாக்குவாதம் செய்து வருகிறார் என்று தெரிய வருகிறது. ஆதலால் முதன் முதலில் பதிவு செய்ததுதான் செல்லும். இரண்டாவதாக 2008இல் பதிவு செய்தது எப்படி செல்லும் என்பது சார் பதிவாளர் வெங்கடேசனுக்கே வெளிச்சம். 29.7 .2026 அன்று முதல் கடந்த ஒரு மாதமாக இப்படி அலைக்கழிக்கப்பட்டு வருகிறார் கஜேந்திரன். அடங்கல், ஈசி அனைத்தும் சரியாக இருந்தும் அவர் இடத்தை பதிவு செய்து கொடுக்க மனமில்லாமல் கஜேந்திரனை அலையாய் அலைந்து திரிந்து வரச் செய்கிறார் என்று சொன்னால் அதுதான் நிதர்சன உண்மை. ஒரு ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்த ஒரு நபரை இப்படி அலைகழிப்பது ஏனோ? என்பது புரியவில்லை. வெங்கடேசனும் ஒரு ஓப்பன் ஹார்ட் சர்ஜரி செய்தவர் என்பது அனைவருக்கும் நன்கு தெரியும். ஒரு நோயாளியை பற்றி இன்னொரு நோயாளி நன்கு அறிந்திருக்கலாம். ஆனால் தெரிந்தே இப்படி நடந்து கொள்வது ஏன்? என்பது புரியவில்லை. தனது மருத்துவ செலவுக்கு பணம் வேண்டும் என்பதற்காக கஜேந்திரன் பணத்திற்காக கடந்த ஒரு மாதமாக அலைகிறார்.

ஆனால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்ட வில்லை. அது என்றைக்கு எட்டும் என்பது விசாரணையில் முடிவுக்கு வரும் என்பது தெரிய வருகிறது. அனைத்தும் சரியாக இருந்தாலும் இதை பதிவு செய்ய சார் பதிவாளர் வெங்கடேசன் மறுப்பது ஏன்? என்ற சிதம்பர ரகசியம் வெளிப்படவில்லை. அது வெளிப்பட்டால் அனைத்தும் தெள்ளத் தெளிவாகிவிடும். நிலமும் பதிவாகிவிடும். இது என்றைக்கு நடக்கிறது என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அப்படி ஏதாவது தவறும் பட்சத்தில் தமிழக அரசின் பத்திர பதிவுத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து முறையீடு செய்ய உள்ளதாகவும் பாதிக்கப்பட்டுள்ள நோயாளி கஜேந்திரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ‘ப’ வைட்டமினை சங்கரன் தரப்பில் வாங்கிக் கொண்டு சார் பதிவாளர் வெங்கடேசன் பணியை முடித்து தராமல் கஜேந்திரன் தரப்பினரை இழுத்தடிக்கிறாரா? என்பதுதான் புரியாத புதிராக உள்ளது.
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்.
செய்தி ஆசிரியர் ச.வாசுதேவன்.
