தொழில் உரிமம் பெறாமல் இயங்கிய கடைக்கு மாநகராட்சி அலுவலர்கள் சீல் வைப்பு!

வேலூர் மாநகராட்சி பகுதியில் தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்பு விதிகள் 2023 படி அனைத்து தொழில் நிறுவனங்கள், உணவகங்கள், விடுதிகள் போன்ற எந்த ஒரு தொழிலாக இருந்தாலும் தொழில் உரிமம் (Trade License) உள்ளாட்சி அமைப்புகளில் பெற வேண்டும். வேலூர் மாநகராட்சி மண்டலம் 3க்கு உட்பட்ட தென்னமரத் தெருவில் தொழில் உரிமம் இன்றி செயல்பட்டு வந்த ஸ்டார் ஆப்டிக்கல் நிறுவனம் கண்டறியப்பட்டது. இதையடுத்து மாநகராட்சி ஆணையாளர் சுல்தானா மற்றும் மாநகர நல அலுவலர் மரு. பிரதாப் குமார் உத்தரவின் பேரில் ,சுகாதார அலுவலர் முருகன் தலைமையிலான குழு சுகாதார ஆய்வாளர் சாம் கர்ணல், சின்னதம்பி, ராதா மற்றும் சுகாதார மேற்பார்வையாளர்கள் ஸ்டார் ஆப்டிக்கல் கடையை மூடி சீல் வைத்தனர். இந்த சம்பவம் தென்னைமர தெரு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
CATEGORIES வேலூர்
TAGS velloreசீல் வைப்புதமிழ்நாடுதலைப்பு செய்திகள்தொழில் உரிமம்வேலூர்வேலூர் மாநகராட்சிவேலூர் மாவட்டம்
