காங்கேயநல்லூரில் திருமுருக கிருபானந்த வாரியாரின் 121ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா!

வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, காங்கேயநல்லூரில் புகழ்பெற்ற திருமுருக கிருபானந்த வாரியாரின் 121 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா, வேலூர் மாவட்ட ஆட்சியர் பி.எஸ்.லீலா அலெக்ஸ், ஞானதிரு திருமுருக கிருபானந்த வாரியாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் டி.எம்.கதிர்ஆனந்த், மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், காட்பாடி 1வது மண்டலக்குழுத் தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, அறங்காவலர் குழு தலைவர் பரமசிவம், வேலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ப.பேச்சிமுத்து, மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன், அதிமுக 14வது வட்ட செயலாளர், 10 வார்டு மாமன்ற உறுப்பினர் ரமேஷ், டீட்டா சரவணன், ஜே. சி. பி. சுரேஷ், முன்னாள் சார் பதிவாளர் அலுவலக பணியாளர் சுப்பிரமணி, செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கலந்து கொண்டு கிருபானந்த வாரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
