அதிகாரிகள் டார்ச்சர் செய்வதால் மன உளைச்சல் ஏற்பட்டு, ரத்த அழுத்தம் அதிகரித்துவிட்டதாக கூறி 108 ஆம்புலன்சை வரவழைத்து மருத்துவமனைக்கு சென்ற அரசு பேருந்து ஓட்டுநர்.

அதிகாரிகள் டார்ச்சர் செய்வதால் மன உளைச்சல் ஏற்பட்டு, ரத்த அழுத்தம் அதிகரித்துவிட்டதாக கூறி 108 ஆம்புலன்சை வரவழைத்து மருத்துவமனைக்கு சென்ற அரசு பேருந்து ஓட்டுநரால் தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் போக்குவரத்து ஊழியர்களிடையே பரபரப்பு:

அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்டம் புறநகர் பேருந்தில் ஓட்டு ரகராக உள்ள ஸ்ரீகாந்த்.

கும்பகோணத்திலிருந்து திருச்சிக்கு இன்று காலை சென்ற போது காலை 10 மணியளவில் பேருந்து திடீரென பழுதானதால் வேறு பேருந்தில் பயணிகளை ஏற்றிவிட்டு கும்பகோணம் டெப்போவிற்கு சென்ற ஓட்டுநர் ஸ்ரீகாந்த்

பேருந்து பழுது நீக்கிய பின் மாலை 4 மணிக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு தஞ்சை புதிய பேருந்துநிலையத்திற்கு வந்து தஞ்சை பயணிகளை இறக்கிவிட்டு, திருச்சிக்கு புறப்பட தயாரான ஓட்டுநர் ஸ்ரீகாந்தை அதிகாரிகள் திருச்சிக்கு செல்லவேண்டாம் கும்பகோணத்திற்கு போகுமாறு பணி வழங்கியதால் மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறும் ஓட்டுநர் ஸ்ரீகாந்த் அவரே 108 ஆம்புலன்சுக்கு போன் செய்து அரசு மருத்துவமனைக்கு சென்று விட்டார்.

இது குறித்து கூறிய ஒட்டுநர் ஸ்ரீகாந்த் தான் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர் என்றும் கும்பகோணத்தில் பொருப்பில் இருப்பதாகவும் அதிகாரிகள் டார்ச்சர் செய்ததால் தான் மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்டதாகவும், வியர்க்கிறது நெஞ்சை வலிக்கிறது ஆம்புலன்சை வர சொல்லி மருத்துவமனைக்கு செல்வதாக கூறினார்.

இச்சம்பவம் தஞ்சை புதிய பேருந்து நிலைய போக்குவரத்து ஊழியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
