அந்தியூரில் நீர்வழிப்பாதை அக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் அமைச்சர் அறிவிப்பு.

அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார்.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழை காரணமாக வரட்டு பள்ளம் அணை எண்ணமங்கலம் ஏரி கெட்டி சமுத்திரம் ஏரி அந்தியூர் பெரிய ஏரி உட்பட ஏழு ஏரிகள் அதன் முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் குடியிருப்பு பகுதிகளில் புகுந்தது.
இன்று இதனை பார்வையிட வந்த தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி அண்ணா மடுவு. பெரியார் நகர். ஏ எஸ் எம் காலனி. கண்ணப்பன் கிணறு வீதி .அழகர் நகர் ஆகிய பகுதிகளை பார்வையிட்ட பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அந்தியூரில் நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் தரை பாலங்களை உயர் மட்ட பாலங்களாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார் இந்த ஆய்வின்போது ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் கிருஷ்ணன்ணுண்ணி. அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாசலம். ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் வட்டாட்சியர் தாமோதரன்.
பேரூராட்சி செயல் அலுவலர் செல்வகுமார் பேரூராட்சி தலைவி திருமதி பாண்டியம்மாள் வருவாய் ஆய்வாளர் சுதாகர் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.