BREAKING NEWS

அந்தியூரில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் பூட்டு போட்டனர்.

அந்தியூரில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் பூட்டு போட்டனர்.

அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார்.

 

ஈரோடு மாவட்டம், அந்தியூரில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் பூட்டு போட்டு அபராதம் விதிக்கப்பட்டது.

 

அந்தியூர் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தனசேகர் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் போலீசார் அந்தியூரில் முக்கிய பகுதிகள் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படும் பகுதிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

 

 

 

இதன் அடிப்படையில் இன்று அந்தியூர் பஸ் நிலையம் கனரா வங்கி ரவுண்டானா ஆகிய பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர வாகனங்களுக்கு பூட்டு போடப்பட்டது மேலும் வாகன உரிமையாளர்கள் அபராதம் கட்டிய பின்னரே வாகனங்கள் விடுவிக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

 

அந்தியூர் போக்குவரத்து போலீசார் தெரிவிக்கையில் அந்தியூரில் முக்கிய வீதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களுக்கு பூட்டு போடப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை செய்தனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )