அந்தியூரில் மகளிர் தினத்தை முன்னிட்டு முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் மகளிருக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து கூறினார்.

உலக மகளிர் தினம் இன்று தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் அந்தியூரில் அதிமுக சார்பில் மகளிர் தின நிகழ்ச்சி நடைபெற்றது.
அந்தியூர் பேரூராட்சி அதிமுக கவுன்சிலர் கலைச்செல்வி குருராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சரும் தற்போதைய அதிமுக கோபி சட்டமன்ற உறுப்பினருமான கே ஏ செங்கோட்டையன் கலந்து கொண்டு மகளிர்க்கு பொன்னாடை போர்த்தி இனிப்பு வழங்கி வாழ்த்து கூறினார்.
இந்த நிகழ்வின் போது, மாவட்ட துணை செயலாளர் எஸ் பி பழனிச்சாமி மேற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் வி குருராஜ் கூட்டுறவு சங்க தலைவர்கள் சண்முகானந்தம் ஹோட்டல் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார்.
CATEGORIES ஈரோடு