BREAKING NEWS

அந்தியூரில் வீடு புகுந்து நகை பணம் செல்போன் திருடிய வாலிபர் கைது.

அந்தியூரில் வீடு புகுந்து நகை பணம் செல்போன் திருடிய வாலிபர் கைது.

அந்தியூர் திருநீலகண்டர் வீதியைச் சேர்ந்த பூபதி என்பவரது வீட்டில் கடந்த 9ஆம் தேதி அவரது வீட்டின் பூட்டை உடைத்து வீட்டில் இருந்த பணம் 14 ஆயிரம் ரூபாய் மற்றும் இரண்டு செல்போன் 11/2சவரன் நகை திருட்டு போனது இதுகுறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில்,

அந்தியூர் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி தலைமைக்காவலர் சக்திவேல் காவலர் பிரபு குற்றப்பிரிவு தலைமை காவலர்கள் செந்தில்குமார் திருநாவுக்கரசு இன்று புது மேட்டூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொழுது,

அப்பகுதியில் இருந்து போலீசாரை பார்த்து தப்பியோடிய நபரை பிடித்து விசாரித்ததில், அவர் பெயர் வெங்கடேஷ் என்கிற வெங்கடாசலம் இவர் பிரம்மதேசம் சின்ன குளம் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது உடனடியாக அவரை காவல் நிலையம் அழைத்து வந்து வழக்குப்பதிவு செய்து அவரிடமிருந்து 11/2 சவரன்நகை 2 செல்போன் பணம் 14 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்தனர்.

மேலும் இவர் மீது ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் பல குற்ற வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது பின்னர் போலீசார் வெங்கடேஷை கைது செய்து பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )