BREAKING NEWS

அந்தியூர் அருகே பர்கூர் மலையில் 2000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் 3 பேர் கைது.

அந்தியூர் அருகே பர்கூர் மலையில் 2000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் 3 பேர் கைது.

அந்தியூர் அருகே பர்கூர் மலையில் இருந்து ரேஷன் அரிசி கடத்தி வருவதாக தனிப்படை சிறப்பு உதவி ஆய்வாளர் முருகன் தலைமை காவலர்கள் தேவராஜ் சென்னிமலை ஆகியோருக்கு ரகசிய தகவல் கிடைத்தது தகவலின் அடிப்படையில் வரட்டுப்பள்ளம் அணை அருகே கொண்டை ஊசி வளைவு பகுதியில் வந்த டெம்போ வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் 2000 கிலோ ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

வாகனத்தை ஓட்டி வந்த ஈரோடு நசியனூர் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி மற்றும் முத்துச்சாமி சுரேஷ் ஆகியோரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர் பின்னர் ரேஷன் அரிசி கடத்தி வந்த மூன்று பேரையும் உணவு பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர் இதுகுறித்து மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )