அந்தியூர் காவல்துறை சார்பில் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி பத்ரகாளியம்மன் கோவில் முன்பு இருந்து தொடங்கியது
இந்த விழிப்புணர்வு பேரணியில் பவானி உட்கோட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச் கலந்துகொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தார்
பேரணியில் அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் அந்தியூர் மங்களம் பள்ளி மாணவ மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு போதைப்பொருள் உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள் குறித்த பதாகைகளை ஏந்தியபடி கோஷங்கள் எழுப்பினர்
பேரணி பத்ரகாளியம்மன் கோவில் முன்பு தொடங்கி சிங்கார வீதி தேர் வீதி பர்கூர் ரோடு வழியாக மீண்டும் பத்ரகாளியம்மன் கோவில் முன்பு சென்று நிறைவு பெற்றது
இப்பேரணியில் அந்தியூர் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் பள்ளி ஆசிரிய ஆசிரியைகள் கலந்து கொண்டனர்
CATEGORIES முக்கியச் செய்திகள்
