அந்தியூர் தவிட்டுப்பாளையத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு அந்தியூர் நகர செயலாளர் மாதேஷ் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைத் தலைவர் எஸ்எல் பரமசிவம் மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் ஷேக் முகைதீன் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்சிஆர் கோபால் வடக்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி வடக்கு மாவட்ட தலைவர் செங்கோட்டையன் வன்னியர் சங்கத் தலைவர் திருமுருகன் பசுமைத்தாயகம் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் அந்தியூர் நகரம் மற்றும் ஒன்றியத்தில் புதிய பொறுப்பாளர்களை நியமிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் முடிவில் அந்தியூர் நகர தலைவர் பாலமோகனசுந்தரம் நன்றியுரையாற்றினார்.
CATEGORIES Uncategorized