அனல் மின் நிலையத்தில் யூனிட்டுகளை இயக்குவதற்கு தேவையான நிலக்கரி உள்ள நிலையில் இயக்குவதற்கு தேவையான தடை உள்ளது
அனல் மின் நிலையத்தில் யூனிட்டுகளை இயக்குவதற்கு தேவையான நிலக்கரி உள்ள நிலையில் இயக்குவதற்கு தேவையான தடை உள்ளது.
அனல் மின் நிலையத்தில் யூனிட்டுகளை இயக்குவதற்கு தேவையான நிலக்கரி உள்ள நிலையில் இயக்குவதற்கு தேவையான தடை உள்ளது என தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் ராஜேந்திரன் தூத்துக்குடியில் பேட்டி.
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் தூத்துக்குடி தெர்மல் கிளையின் மாநாடு தெர்மல் நகரில் நடைபெற்றது.
தூத்துக்குடி தெர்மல் நகரில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநாடு இன்று துவக்கியது. மாநாட்டிற்கு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் தூத்துக்குடி கிளை தலைவர் கென்னடி தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் ராஜேந்திரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
பின்னர் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் ராஜேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் மின்சார வாரியத்திற்கு சொந்தமான அனல் மின்நிலையங்களை பாதுகாக்க வேண்டும் என்ற முறையில் கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்த அவர், தமிழக மின்சார வாரியம் தூத்துக்குடி, மேட்டூர், வட சென்னை போன்ற இடங்களில் உற்பத்தி ஆகக்கூடிய 4320 மெகாவாட்டை முழுமையாகப் பயன்படுத்தாமல் இருக்கிறது. அதற்கு காரணம் தனியார் இடத்தில் அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்குவதற்காக ஏற்பட்ட நீண்டகால கொள்முதல் ஒப்பந்தம் மூலம் மின்சாரத்தை வாங்குகின்ற நடவடிக்கை. அனல் மின்சார உற்பத்தியை நிறுத்தி விட்டு அங்கு குறிப்பிட்ட மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு யூனிட் ஓன்றுக்கு 6 ரூபாய் 93 பைசா என்று சொல்வது பொருத்தமாக இருக்காது.
பொதுத்துறையான மின்சாரத்துறைக்கு சொந்தமான அனல் மின்நிலையங்களில் உற்பத்தியை முழு வீச்சில் தொடங்கவேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை என்றார். அதற்கான நிலக்கரி தட்டுப்பாடு இல்லாமல் வந்துள்ளது. தொடர்ச்சியாக ரயில்கள் மூலம் நிலக்கரி கொண்டு வர அரசு கவனம் செலுத்தவேண்டும் என்றார். மேட்டூர், தூத்துக்குடி அனல்மின் நிலையங்கள் 25 வருடங்களுக்கும் மேலாக உற்பத்தியை செய்து வருகிறது அதற்கு தகுந்தாற்போல் அதற்கான இயந்திரங்கள் உள்ளது என்றார்.
சமீபத்தில் மின்சார வாரியத்தின் வரவு செலவு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில் வரவு 63 ஆயிரம் கோடி செலவு 76 ஆயிரம் கோடி இந்த இடைவெளியே சமாளிப்பதற்காக 13 கோடி ரூபாய் இழப்பீட்டை மாநில அரசு தந்ததாகக் தெரிவித்தார். இந்த இழப்பீடு கடந்த 10 ஆண்டுகளாக கொடுத்து வந்துள்ளார் என சொன்னாள் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம் கோடி கடன் என்பது இருந்திருக்காது என தெரிவித்த அவர், இப்பணம் கொடுக்காததால் கடன் சேர்ந்த பின்னாடி ஊழியர்களுக்கான சலுகைகளை பறிக்கின்ற நடவடிக்கைகளை அரசு செய்து வருகிறது என குறிப்பிட்டார்.
உதாரணத்திற்கு பஞ்சப்படி மத்திய அரசு அறிவித்த பின்னும் ஜனவரி மாதம் முதல் கொடுக்க வேண்டிய பஞ்சப்படியை தமிழக அரசின் அனுமதி பெற்று தான் கொடுக்க வேண்டும் என தமிழக மின்சார வாரியம் சொல்கிறது இது தவறான விஷயம் இதற்கு அவர்கள் சொல்கின்ற காரணம் மின்சார வாரியம் நஷ்டத்தில் இயங்குவதாக தெரிவிக்கின்றனர். அரசு மின்சார சட்டம் 2021 கைவிடவேண்டும், அடுத்த வாரம் நடைபெறக்கூடிய தொழிற்சங்க கூட்டமைப்பு கூட்டத்தில் இந்த உத்தரவை ரத்து செய்யவில்லை என்றால் நீண்ட நெடிய போராட்டத்திற்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்படும் என தெரிவித்தார்.
சமீபத்தில் 4 மாவட்டங்களில் பெய்த மழையின் காரணமாக மின் தேவை தற்போது குறைந்துள்ளது என்றார். தற்போது அனல் மின் நிலையத்தில் யூனிட்டுகளை இயக்குவதற்கு தேவையான நிலக்கரி கையிருப்பில் உள்ளது என்ற அவர், ஆனால் இயக்குவதற்கு தேவையான தடை மேலிருந்து உள்ளது என்றார். தனியாரிடம் நீண்ட காலமாக போட்ட ஒப்பந்தங்களை மறு ஒப்பந்தம் செய்யாமல் இருப்பதால் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது மறு ஒப்பந்தம் செய்தால் தமிழக மின்சார வாரியம் லாபத்தில் இயங்கும் என அவர் தெரிவித்தார். மின்சாரத்தால் வரவு 63 ஆயிரம் கோடியில் தனியாரிடம் வாங்கிய மின்சாரத்திற்கு 46 ஆயிரம் கோடி அளிக்கப்பட்டுள்ளது.இதில் ஊழியர்களுக்கான சம்பளம் 9 ஆயிரம் கோடி மட்டுமே என்ற அவர் தொடர்ந்து நடைபெறும் மின்சார சீர்கேட்டை தடுக்க வேண்டும் என்றார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.