அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு 54ம் ஆண்டு மாபெரும் கபடி போட்டி!
வேலூர் மாநகராட்சி, காட்பாடி 1வது மண்டலம் விருதம்பட்டில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு 54 ஆம் ஆண்டு மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது, இறுதிப் போட்டியை காட்பாடி 1வது மண்டல சுகாதார அலுவலர் டாக்டர் .கே. சிவக்குமார் அவரது திருக்கரங்களால் தொடங்கி வைத்து, பரிசுத்தொகையையும் , கேடயங்களையும் வழங்கி கௌரவித்தார்.
போட்டியில் 60 ஊர்களில் இருந்து வந்த வீரர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். வெற்றி பெற்றவர்கள் விவரங்கள் வருமாறு:
முதல் பரிசு = பல்லவன் ( வாணியம்பாடி )
இரண்டாம் பரிசு= கேகே பிரதர்ஸ் (செஞ்சி )
மூன்றாம் பரிசு = எஸ்எம் பிரதர்ஸ்
நான்காம் பரிசு = எஸ்ஆர்என் புளூ ஸ்டார்
ஐந்தாம் பரிசு = 7 பிரதர்ஸ் (காட்பாடி)
ஆறாம் பரிசு = வீரா( புது வசூர்)
ஏழாம் பரிசு = கிரீன் ஸ்டார்
எட்டாம் பரிசு = குருவி பிரதர்ஸ்.
போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று நிறைவு பெற்றது குறிப்பிடத்தக்கது.