BREAKING NEWS

அரசியல்

தமிழ்நாட்டில் 12 ஆயிரத்து 838 பதவியிடங்களுக்கு நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் இன்று அவை பரிசீலனை செய்யப்படுகின்றன.

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: வேட்பு மனுக்கள் இன்று பரிசீலனை பேரூராட்சிகளுக்கு வரும் 19-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதில், மாநகராட்சிகளுக்கு 1,347 வார்டு உறுப்பினர்களும், நகராட்சிகளுக்கு 3,843 வார்டு உறுப்பினர்களும், பேரூராட்சிகளுக்கு 7,621 வார்டு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

 

இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 28-ஆம் தேதி தொடங்கியது. அதனைத்தொடர்ந்து வேட்புமனுத் தாக்கல் நடைபெற்று வந்த நிலையில், கடைசி நாளில் காலை முதலே அரசியல் கட்சியினர், சுயேச்சைகள் விறுவிறுப்பாக வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

 

தமிழகம் முழுவதும் நேற்று மாலை 5 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. எனினும் மதுரை உள்பட பல்வேறு இடங்களில் 5 மணிக்கு முன்பாக வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வரிசைப்படி வேட்புமனுக்கள் பெறப்பட்டன. அவை அனைத்தும் இன்று பரிசீலனை செய்யப்பட்டு முறைப்படி இல்லாத மனுக்கள் நிராகரிக்கப்படும்.

7 ஆம் தேதி வரை வேட்பு மனுக்களை திரும்பப் பெற அவகாசம் அளிக்கப்பட்டுள்ள நிலையில் அன்றைய தினம் களத்தில் இருக்கும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்படுகிறது.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )